மனிதவள அமைச்சின் புதிய KESUMA எனும் நடைமுறை பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம்


(இஷா)

கோலாலம்பூர், மார்ச் 24 - 
மனிதவள துறையின் புதிய அமைச்சரான ஸ்டீபன் சிம் சீ கியோங் அறிவிக்கப்பட்ட KESUMA எனும் நடைமுறை பயிற்சி ஊக்குவிப்புத் திட்டத்தை (ILHAM) மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் அமைப்பு முழுமையாக வரவேற்கிறது. 

இந்த அமைப்பின் கீழ் இயங்கும் தொழில்துறை பயிற்சி திட்டத்தை மேம்படுத்த 20 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரையிலான நிதி உதவியை உயர்த்த அனுமதிக்கப்படும்.இதன் வழி, நீண்ட காலத்திற்கு உள்ளூர் இளம் திறமைகளை வளர்ப்பதில் இந்த பயிற்சி ஊக்குவிப்புத் திட்டம் ஒரு விரிவான சுற்றுச்சூழலை உருவாக்கும்.

இந்த தொழில்துறை பயிற்சி திட்டத்தில் நிதி உதவியை மேம்படுத்துவதன் வழி தொழில்துறை பயிற்சி ஆண்டின் ஜனவரி மதிப்பிட்டில் 20 விழுக்காடு அதிகபட்சம் 50 விழுக்காடு வரை முதலாளியின் லெவி நிலுவைத் தொகையில் அனுமதிக்கப்படும். இதன் மூலமாக கிடைக்கப்படும் நன்கொடை தொழில்துறை பயிற்சி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு உதவியாக அமையும். 

இந்த நன்கொடை மாதாந்திர பயிற்சிக்கான சம்பளமாக முதலாளிகள் பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் நிதி தேவைகளுக்கும் பயிற்சிகளை நல்ல முறையில் நடத்த வழிவகுக்கும்.

இதோடு, உச்சவரம்பு விதிமுறைகளுடன் தொழில்துறை பயிற்சி திட்டத்தின் கீழ் மாதாந்திர பயிற்சிக்கு இதுவரை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட மாதாந்திர சம்பளம் முழுமையாக ரத்து செய்யப்படும். 

இதன் பிறகு, முதலாளிகள் தங்களின் நிறுவனத்தில் அமர்த்தப்படும் பயிற்சியாளர்களுக்கு மாத தொகையை கட்டுப்படுத்த இயலாது. இந்த திட்டத்தின் மேம்பாட்டில் முதலாளிகள் அவர்களின் பயிற்சியாளர்கள் கலந்து கொள்ளும் மற்ற பயிற்சிகளின் செலவையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த தொழில்துறையின் கீழ் வழங்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ள பயிற்சியாளர்கள் தகுதிபெற குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு குறையாமல் தொழில்துறை பயிற்சி பெறுவதையும் 12 மாதத்திற்கு கீழ் நிறுவனத்தில் பயிற்சி பெறுவதை முதலாளிகள் உறுதி செய்ய வேண்டும். 

இதன் மூலம் தொழில் வழங்கும் முதலாளிகள் பயிற்சி பெறுபவர்களுக்கு அவர்களின் லெவி தொகையை கோருவதன் மூலம் ஒரு வருடம் வரை தொழில்துறை பயிற்சி சம்பளத்தை வழங்க முடியும்.

இதுமட்டுமின்றி, இந்த தொழில்துறை பயிற்சி திட்டத்தை தவிர சுற்றுச்சூழல் அமைப்பின் கீழ் இன்னும் மூன்று திட்டங்களான ILHAM KESUMA ஆனது கட்டமைக்கப்பட்ட தொழில்துறை பயிற்சிக் கொள்கை, லைக்ஸ் மேட்சிங் கிராண்ட் மற்றும் KESUMA இன் கீழ் மற்ற பிற அமைப்புகளில் இயக்கப்படும் MyNext போன்ற ஆதரவு திட்டங்களை உள்ளடக்கியதாகும்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement