(இளம்பரிதி)
நிபோங் திபால், ஜூலை 6 -
இன்று நடந்து முடிந்த சுங்கை பக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாக்காத்தான் ஹரப்பானுக்கு பெரிக்காத்தான் நெஷனல் கட்சி ஆப்பு வைத்தது.
2008ஆம் ஆண்டிலிருந்து பாக்காத்தான் ஹரப்பானின் கோட்டையாகத் திகழ்ந்து வந்த அத்தொகுதி கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலப் பொதுத் தேரிதலின்போது முதன் முறையாக பெரிக்காத்தான் நெஷனல் எதிர்கட்சியிடம் கவீழ்ந்தது.
ஆயினும் சில மாதங்களுக்கு முன் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் உடல்நலக் குறைவால் அகல மரணம் அடைந்ததால் அங்கு இடைத்தேர்தல் நிர்ணயிக்கப்பட்டது.
இவ்வேளையில், எதிர்க்கட்சியிடம் பறிகொடுத்த தனது கோட்டையை மீண்டும் கைப்பற்றும் வேட்கையுடன் பாக்காத்தான் ஹரப்பான் - தேசிய முன்னணி கூட்டனி அரசாங்கம் அங்கு சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டது.
இருப்பினும் பாகாத்தானின் அக்கனவுக் கோட்டை கானல் நீரானதுதான் மிச்சம். சுமார் இரு வாரங்களாக தேர்தல் பிரசாரத்தின் போது, நாங்கள் நிச்சயம் இத்தொகுதியை மீட்டெடுப்போம் என்று எதிர்க்கட்சியினை குறைத்து மதிப்பிட்டு மமதையுடன் இருந்த பாக்காத்தான் கூட்டனிக்கு இன்று தகுந்த பாடம் கர்பிக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடந்து முடிந்த இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நெஷனல் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சென்ற தேர்தலில் பெற்ற வாக்கினைக் காட்டிலும் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்று அத்தொகுதியை மீண்டும் தற்காத்துக் கொண்டது.
பெரிக்காத்தான் கூட்டனியின் வேட்பாளரான அபிடின் இஸ்மயில் 14,489 வாக்குகள் பெற்று தன்னுடன் நேரடியாக களம் கண்ட பாக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் டாக்டர் ஜொஹாரி அரிஃபினை தோற்க்கடித்தார்.
ஜொஹாரி வெறும் 10,222 வாக்குள் மட்டுமே பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலஞ்சென்ற உறுப்பினர் சுமார் 1,500 வாக்குகள் பெரும்பான்மையில் பாக்காத்தான் ஹரப்பான் கோட்டையைத் தகர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இம்முறை இதில் மகிழ்ச்சியூட்டும் தருணம் என்னவென்றால் எதிர்கட்சி சுமார் 4,267 பெரும்பான்மை வாக்குகள் பெற்று பாக்காத்தான் ஹரப்பானைத் தலைகுனியச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுக்குப் செய்தியாளர்களிடம் பேசிய பினாங்கு முதல் சோவ் கொன் யோவ் சீன மற்றும் இந்திய வாக்காளர்களின் குறைவான வாக்குகள்தான் பாக்காத்தான் ஹரப்பானின் தோல்விக்குக் காரணம் என்றார்.
இன்றைய இடைத்தேர்தலில், 10 முதல் 13 விழுக்காடு சீன, இந்திய வாக்காளர்கள் வெளியே வராததன் காரணமாக சுமார் 1,000 முதல் 2,000 வாக்குகளை பாக்காத்தான் அரசாங்கம் பெறத் தவறியதாக அவர் மேலும் கூறினார்.
டீசல் விலையேற்றம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு என்று தேசிய விவகாரங்கள் உட்பட மாநில அளவிலும் மக்கள் பிரச்சனையும் இத்தோல்விக்கு வித்திட்டிருப்பதாக அவர் ஒப்புக் கொண்டார்.
இருப்பினும், இதன் பிறகு மாநில அரசாங்கம் அடையாளம் காணப்பட்ட மக்களின் பிரச்சனைகளை அணுகி அதற்குத் தக்க தீர்வினைக் காணுமென்று உறுதியளித்தார்.


கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks