மலேசிய சாதனை புத்தகத்தில் அங்கீகாரம்
சிலாங்கூர் மார்ச் 14 -
சுப்பமாலா ஹாட்பாட் உணவகத்திற்கு இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை ஜாகிம் ஹாலால் சான்றிதழை வழங்கியுள்ளது. அந்த உணவகத்தின் ஹாட்பாட் தேர்வுகளுக்கும் சேவைகளுக்கும் இது ஒரு மைல்கல்லாக இருக்குமென நம்பப்படுகிறது.
நேற்று முன்தினம் சன்வே பிரமிட் அவுட்லெட்டில் நடத்தப்பட்ட ஹாலால் சான்றிதழ் வழங்கப்படும் நிகழ்வொன்றில் ஹாலால் சமையலுக்கான சான்றிதழை சுப்பமாலா ஹாட்பாட் பெற்றதோடு மலேசிய சாதனை புத்தகத்தில் முதல் ஹாலால் சான்றிதழ் அளிக்கப்பட்ட செச்சுவான் ஹாட்பாட் எனவும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த அங்கீகாரத்தின் மூலம் மலேசிய முழுவதும் உள்ள முஸ்லீம் வாடிக்கையாளர்களின் மத்தியில் நட்புறவை ஏற்படுத்த முடியுமென நம்பப்படுகிறது.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களான தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் முன்னிலையில் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் புத்தாக்க வளர்ச்சியின் சிலாங்கூர் மாநில ஆளூநர் டாக்டர் முஹமாட் ஃபாமி ங்ஹா ஹாலால் சான்றிதழை சுப்பமாலா ஹாட்பாட் தலைமை நிர்வாகி டத்தோ அஷ்மி பின் ஹாசான் அவர்களிடம் வழங்கினார்.
இதோடு, மலேசிய சாதனை புத்தகத்தின் சான்றிதழை மூத்த பதிவு ஆலோசகர் எட்வின் யோ வழங்கினார். இவர்களுடன் பிரபல நடிகைகளும் ஹாட்பாட் ஆர்வலர்களான டயானா டேனியல், ஃபஹாரா நபிலா ஆகியோருடன் டிஜிட்டல் கிரேட்டர் எலெச்சர் லீயும் கலந்து கொண்டார்.
இந்த ரமலான் மாதத்தை முன்னிட்டு சுப்பமாலா ஹாட்பாட் உணவகத்தில் ரமலான் ப்ஃவேட் என 12 மார்ச் முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை விலைக் கழிவுவோடு வழங்கப்பட்டுள்ளது. அந்த ப்ஃவேட் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அடிப்படை உணவு பிரிவில் விலையின் ஆரம்பம் தலா ரி.ம. 49.90, கடல்வாழ் உணவு பிரிவில் விலையின் ஆரம்பம் தலா ரி.ம 69.90 மற்றும் உயர்தர உணவு பிரிவில் விலையின் ஆரம்பம் தலா ரி.ம 119.90.
சுப்பமாலா ஹாட்பாட் உணவு வகைகளைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள அதன் முகநூல் மற்றும் படவரி வலைப்பக்கத்தை வலம் வாருங்கள்.



கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks