வயதான மாது தீயில் கருகி மாண்டார்!



(இஷா)
சுபாங் ஜெயா, மார்ச் 15 - 
இன்று பின்னிரவில் யூஎஸ்ஜே 4 -இல் ஏற்ப்பட்ட தீ விபத்தில் இரண்டு தரை வீடுகள் தீயில் சேதமாகின, இதில் வயதான மாது உயிரிழந்ததோடு அவருடைய கணவர் மூச்சுத் திணறலுக்கு அவதியுற்றார்.

சுமார் பின்னிரவு 1.15 மணியளவில் தங்களுக்கு இச்சம்பவம் குறித்து தகவல் கிடைக்கப்பெற்றதாக சுபாங் தீயணைப்ப்பு பிரிவின் தலைவர் ஷம்சுல் அபிடின் தெரிவித்தார்.

சுபாங் மற்றும் பூச்சோங் தீயணைப்பு பிரிவில் இருந்து ஐந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்குச் சென்றன. அங்கு சென்று அடைவதற்குள் 60 சதவிகிதம் வீடுகள் தீயில் தீக்கிரையானது என அவர் தெரிவித்தார்.

தீயில் மாட்டிக்கொண்ட 70 வயதுக்குட்பட்ட தம்பதிகளை தீயணைப்பு வீரர்கள் வெளியே கொண்டு வந்தனர். அம்மாது வீட்டினுள்ளே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தரப்பு உறுதி செய்தனர். 

சுமார் பின்னிரவு 1.40 மணியளவில் தீயைக் கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement