சுங்கை பூலோ, மார்ச் 15 -
சிலாங்கூரில் போதைப்பொருளைக் கடத்திய குற்றத்திற்காக தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த இரண்டு தம்பதிகள் கைது செய்யப்ப்பட்டனர்.
சுபாங் ஜெயா, அம்பாங் ஜெயா மற்றும் பலாக்கோங்கில் நடத்தப்பட்ட சோதனையில் 6 பேர் பிடிபட்டதாக போலீஸ் தலைமையகத்தில் நடைப்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சிலாங்கூர் மாவட்ட தலைமை போலீஸ் ஆணையர் டத்தோ உசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமையன்று சுபாங் ஜெயாவில் கார் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் இருவர் 40.1கிலோகிராம் கஞ்சா வைத்திருப்பதைக் போலீசார் கண்டுபிடித்ததோடு அவர்களை விசாரித்ததில் அம்பாங்கில் வீடொன்றில் 50.3 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளைக் கைப்பற்றியதாக அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பலாக்கோங்கில் நடத்தப்பட்ட சோதனையில் அந்த வெளிநாட்டு தம்பதிகளைக் கைது செய்ததாக அவர் கூறினார். இதுவரை நடத்தப்பட்ட்ட விசாரணையில், அத்தம்பதிகள் அண்டை நாட்டிலிருந்து போதைப்பொருள்களை விநியோகம் செய்வதாகவும் இதில் இன்னும் சிலரும் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks