(இஷா)
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13-
போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் அப்துல் ரஹ்மான் என்பவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளார் அப்துல் மாலிக் டாஸ்டிகீர் என்ற டத்தோ மாலிக்.
அண்மையில் இந்தியா செய்தியாளரான சங்கர் என்பவர் கைதான ஜாபர் சாதிக்கின் முதலாளி மலேசியாவில் இருப்பதாகவும் அவர் டத்தோ மாலிக் என ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். அதோடு, சமூக வலைத்தளங்களிலும் அவரின் பெயர் பேசப்பட்டதை தொடர்ந்து நேற்று கோலாலம்பூர் டாங் வாங்கி போலீஸ் தலைமையகத்தில் புகார் கொடுத்துள்ளதாகவும் அதன் நகலை இந்திய தூதரக ஆணையத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் மாலிக் தனது படவரி வலைத்தளத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார்.
மேலும், ஜாபர் சாதிக் என்பவருக்கும் எனக்கும் எந்த ஒரு நட்பும் இல்லை, அவரை நான் சந்தித்ததே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். தன் பெயருக்கும் அந்தஸ்துக்கும் களங்கம் வர வைக்கும் நோக்கில் இது போன்ற அவதூறுகள் பரப்பப்படுவதாக அவர் கூறினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks