கோலாகுபு பாரு நாடாளுமன்ற உறுப்பினர் லீ கி இயோங் இயற்கை எய்தினார்



(இஷா)

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 22 - 
கோலாகுபு பாரு நாடாளுமன்ற உறுப்பினர் லீ கி இயோங் இன்று இயற்கை எய்தினார். புற்றுநோயால் அவதியுற்ற அவர், தனது 58 ஆவது வயதில் மரணமுற்றதாக சின் சியூ நாளிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் லீ 4,119 வாக்குகள் பெரும்பான்மையில் கெராக்கானின் தியோ கியென் ஹாங்கை தோற்கடித்தார். 2013 இல் மசீசாவின் ஓய் ஹுய் வென் என்பவரை 1,702 வாக்குகள் பெரும்பான்மையுடன் தோற்கடித்து, 2018 இல் மசீசாவின் வோங் கூன் முன் என்பவரை விட 7,134 வாக்குகள் பெரும்பான்மையுடன் அவர் தனது இடத்தை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார், அமிருடின் ஷாரி, தான் வெளியிட்ட அறிக்கையில் லீயின் குடும்பத்தினருக்கும் டிஏபி கட்சிக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.

அதோடு, நல்ல அனுபவமிக்க தலைவரை இழந்து விட்டதோடு சிலாங்கூர் மற்றும் கோலாகுபு பாரு மக்களுக்கு இது ஒரு பேரிழைப்பு என்று குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான சிலாங்கூர் நாளேட்டில், அவர் கருப்பை புற்றுநோய் கண்டிருந்து சிகிச்சை பெற்று வந்ததாகவும் 2023 ஆம் தேர்தலுக்கு முன்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement