தேசிய மிருகக்காட்சி சாலையின் ரமலான் கஞ்சி வழங்கும் நிகழ்வு

 அடாபி நிறுவனம் மற்றும் 99 பேரங்காடி கைக்கோர்த்தது


(செய்தி: இஷா - படங்கள் : இராஜமோகன்)

கோலாலம்பூர், மார்ச் 20 - 
இந்த ரமலான் மாதத்தை முன்னிட்டு அண்மையில் தேசிய மிருகக்காட்சி சாலையுடன் இணைந்து அடாபி நிறுவனம் மற்றும் 99 பேரங்காடியும் சுத்தம் செய்யும் கூட்டு முயற்சி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நடவடிக்கையின் நோக்கமானது இந்தப் புனிதமான மாதத்தில் கூட்டு முயற்சியாக நன்கொடை வழங்குபவர்களுடன் ஒன்றிணைந்து பொதுநல சேவையை செய்ய வேண்டும் என்பதே ஆகும்.

இதனைத் தொடர்ந்து, தேசிய மிருகக்காட்சி சாலையின் ஜுப்லி இந்தான் 60ஆம் ஆண்டை முன்னிட்டு இந்த ரமலான் மாதத்தை மேலும் சிறப்பிக்க அடாபி நிறுவனம் ரி.ம. 100,000 தொகையை நன்கொடையாக வழங்கியதோடு ரமலான் சிறப்பு உணவான பூபோர் லம்போக் தயாரிப்பதற்கு அவர்களின் சிறப்பு சமையல் செயல்முறையைப் பயன்படுத்தினர்.



அதோடு, 99 பேரங்காடி அந்த உணவை தயாரிக்க 1,200 உப்பு முட்டையை இலவசமாக கொடுத்தது. இதன் வழி, மிருகங்களின் நலத்தில் அக்கறை காட்டுவதோடு இது போன்ற கூட்டு முயற்சி சமூகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். தேசிய மிருகக்காட்சியில் வேலை செய்யும் பணியாளர்களும் அடாபி நிறுவன ஊழியர்களும் சமைத்த உணவை அருகிலுள்ள தொழுகைகள், பொதுநல காப்பங்களுகக்குக் கொடுத்தனர்.

இந்நிகழ்வின் மூலம் தேசிய மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் அடாபி நிறுவனம் மற்றும் 99 பேரங்காடி ஊழியர்களுடன் நல்ல நட்பு முறையை வளர்த்துக் கொண்டனர். 

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement