உள்ளூர் பிரபலத்தின் நட்புறவு ஓட்ட முயற்சி!




(இஷா)

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 14- 
கடந்த வாரம், உள்ளூர் நடிகர், பாடகர் மற்றும் அறிவிப்பாளரான அலிஃப் சாத்தார் மலேசிய கார்மின் ரன் கிளப் உடன் இணைந்து #GengSubuhMacamJumaat என்ற கொள்கையின் வெளிப்புற நடவடிக்கைகளின் பிரதிநிதியாக நட்புறவு ஓட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தது. இந்த நட்புறவு ஓட்டத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டு வெளிப்புற நடவடிக்கைகளில் சிறந்த ஓர் ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நட்புறவு ஓட்டத்தில் சுமார் 780 பேர் தேசிய மசூதியில் காலை பிராத்தனையை முடித்துக் கொண்டு அந்த சுற்று வட்டாரத்தை நோக்கி கோலாலம்பூர் பறவை பூங்காவின் வட்டாரத்தைச் சுற்றி மறுபடியும் மசூதியை வந்தடைந்தனர்.இதன் நோக்கம் சுறுசுறுப்பான நல்ல ஆரோக்கியமான நடைமுறை வாழ்க்கைக்கு உதவும் என நம்பப்படுகிறது.

அலிஃப் சாத்தார்,கார்மின் வெளியீடான வெளிப்புற smartwatch series கைக்கடிகாரத்தின் பிரதிநிதியாக இருப்பதும் இதுபோல வெளிப்புற நடவடிக்கைகளிலும் ஆரோக்கியமான வாழ்வாதாரத்திற்கும் கார்மின் பல மலேசியர்களுக்கு முன்னோடியாக இருப்பதில் பெருமிதம் கொள்வதாக மலேசிய கார்மின் வணிக குழுமின் தலைமை அதிகாரி ஷீனா சிம் தெரிவித்தார்.

சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்ற முதலில் உங்களைப் போல ஒரே எண்ணம் கொண்ட ஓட்டக்காரர்கள் அல்லது தனிநபர்களோடு உங்கள் நிலைத்தன்மையை உறுதிசெய்ய நட்புறவு வைக்க வேண்டும். இரண்டாவது, உங்களின் அன்றாட உடற்பயிற்சி வழக்கத்தில் பொறுமையாகவும் நிலைத்தன்மையாகவும் இருக்க வேண்டும், இறுதியா, உங்கள் எண்ணங்களை சீராகவும் உங்களின் உடற்பயிற்சி குறிக்கோளை அடைய தயார்படுத்த வேண்டுமென மூன்று துணுக்குகளை தன் அனுபவத்தில் அலிஃப் சாத்தார் பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக, இந்த ரமலான் காலக்கட்டத்தில் நல்ல உடற்பயிற்சி செய்வதோடு சீரான உணவு முறையயும் கடைப்பிடிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். மலேசிய கார்மின் நிறுவனத்தோடு மீண்டும் இணைந்து செயல்படுவது பெருமையாக இருப்பதோடு ஆரோக்கியமான சமுதாயத்தை உண்டாக்க நான் ஒரு பங்காக இருப்பதில் பெருமிதம் கொள்வதாக கூறினார். 

அதோடு, தன் அன்றாட உடற்பயிற்சிக்குப் பயன்படுத்திய Garmin fēnix 7 Pro and Instinct 2X smartwatches கைக்கடிகாரங்களின் வழி  “Beat Yesterday” கொள்கையை கீழ் பல மலேசியர்களுக்குக் கார்மினோடு சேர்ந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ வழிவகுக்க தூண்டுகோலாக இருப்பதாக கூறினார். 

எங்களிம் இந்த கூட்டணி முயற்சியால் ஒற்றுமையான சமூதாயத்தை உருவாக்குவதோடு இந்த ஓட்டத்தோடு மற்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே ஆசை என ஷீனா சிம் தெரிவித்தார்.

இந்த நட்புறவு ஓட்டத்தின் விவரங்களைப் பற்றி தெரிந்துக் கொள்ள facebook.com/GarminMalaysia மற்றும் instagram.com/GarminMalaysia சமூக வலைத்தளங்களையும் மேலும் கார்மின் கைக்கடிகாரங்களை பற்றி விவரங்கள் பெற https://www.garmin.com.my/ அகப்பக்கத்தையும் வலம் வாருங்கள்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement