வெளிநாட்டு பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரியூட்டு! இரண்டு வெளிநாட்டு ஆடவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!


(இஷா)

கோலாலம்பூர், மார்ச்13 - 
வெளிநாட்டு பெண் மீது பெட்ரோலை ஊற்றி எரியூட்டிய இரண்டு வெளிநாட்டு ஆடவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த மார்ச் 9ஆம் திகதி கம்போங் செராஸ் பாரு விளையாட்டு மைதானத்தில் சுமார் இரவு 10.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மறுநாள் பின்னிரவு 1.30 மணியளவில் சம்பந்தப்பட்ட பெண்மணியின் கணவரிடமிருந்து புகார் பெறப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி ஏசிபி  ஜாம் அலி தெரிவித்தார்.

இதில் சம்பந்தப்பட்ட பெண் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையம் (UNHCR) அட்டையை வைத்திருந்ததாகவும் விளையாட்டு மைதானத்தில் தன் இரண்டு வயது மகனை அழைத்து வர சென்ற போது இது நடந்ததாக அவர் கூறினார்.

 அப்பெண்ணின் முகம், உடம்பில் தீக்காயம் எற்பட்டு அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவரின் மகன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் செக்‌ஷன் 326 சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளதாகவும் இந்த சம்பவத்தைப் பற்றி விவரங்கள் தெரிந்த பொதுமக்கள் அருகிலுள்ள போலீஸ் நிலையங்கள் அல்லது செராஸ் போலீஸ் நிலையம் 03-9284 5050/5051,கோலாலம்பூர் போலீஸ் நிலையம் 03-2115 9999 ஆகிய எண்களுக்குத் தொடர்புக் கொள்ளலாம் என அவர் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement