(இஷா)
கோலாலம்பூர், 13 மார்ச்-
நாடு முழுவதும் உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் சுமார் 400,000 மாணவர்கள் கற்றல் பிரச்சனையை எதிர்நோக்குவதாக கல்வி அமைச்சர் ஃப்ஹட்லினா சிடேக் தெரிவித்தார்.
ஆரம்பப்பள்ளியில் ஆண்டு 1 முதல் ஆண்டு 6 வரை சுமார் 280,985 மாணவர்கள் தேசியமொழி பாடத்தில் பின்னடைவில் இருப்பதாக அவர் கூறினார். மேலும், இடைநிலைப்பள்ளியில் படிவம் 1 முதல் படிவம் 5 வரை சுமார் 154,853 மாணவர்கள் வாசித்தல், எழுதுதல் மற்றும் எண்ணுதல் என 3M திறன்களில் பின்னடைவில் உள்ளதாக தெரிவித்தார். ஒட்டு மொத்தமாக 435,838 மாணவர்கள் இப்பிரச்சனையை எதிர்நோக்குவதாக சுட்டிக் காட்டினார்.
இதன்வழி, அனைத்து ஆரம்பப்பள்ளி மாணவர்கள் 3M அடிப்படை திறன்களில் சிறந்து விளங்க பல முயற்சிகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வரை ஆரம்பப்பள்ளி ஆண்டு 1 முதல் ஆண்டு 6 வரை ஒட்டு மொத்தமாக 280,985 மாணவர்கள் தேசியமொழி பாடத்தில் TP1 மற்றும் TP2 தேர்வுகளை எழுதியதாக கூறினார். அதோடு, இடைநிலைப்பள்ளி படிவம் 1 முதல் படிவம் 6 வரை ஒட்டு மொத்தமாக 154,853 மாணவர்கள் தேசியமொழி பாடத்தில் TP1 மற்றும் TP2 தேர்வுகளை எழுதியதாக ரொம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல் காலிப் அப்துல்லா கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
இதன் விளைவாக, மாணவர்கள் பள்ளி முடிப்பை பாதியிலேயே நிறுத்துவதற்கு முக்கிய காரணமாக உள்ளதாக அப்துல் காலிப் சுட்டிக் காட்டினார். இந்தப் பிரச்சனையை களைய சுகாதார அமைச்சு பல முயற்சிகளை மேற்கொள்வதாகவும் வெவ்வேறு 3M அடிப்படை திறன்களின் பயிற்சிகளை வழங்க முடிவெடுத்துள்ளதாகவும் ஃப்ஹட்லினா சிடேக் தெரிவித்தார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks