புக்கிட் ஜாலில் தீபாவளி சந்தையில் "BOH” நிறுவனம் இலவச தேநீர் கோப்பைகள் வழங்கும் திருவிழா

 


சிலாங்கூர், நவ.8-

1929 ஆம் ஆண்டு முதல் மலேசியாவின் மிகவும் பிரபலமான தேயிலை நிறுவனமான BOH, அஜெண்டா சூரியாவின் உள்ளூர்  மற்றும் மிகப் பெரிய தீபாவளி சந்தையில் பங்கேற்பதை  உற்சாகத்துடன் தெரிவித்தது.

மிகவும் அதிக அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த தீபாவளி சந்தையில், மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் அளிக்கும் ஒரு பிரம்மாண்டமான திருவிழாவாகும்.

குறிப்பாக இந்திய மக்களிடையே இப்பண்டிகைகளைக் கொண்டாடுவதில் உற்சாகமும் அதேசமயத்தில் தங்களுக்கும் தாங்கள் குடும்பத்திலிருக்கும் வேண்டிய பொருட்களை வாங்கவும் இத்திருவிழா வாய்ப்பளிக்கின்றது.

2023ஆம் ஆண்டு தீபாவளி சந்தையுடன் இணைந்து, BOH நிறுவனம் சுவையான 1,000 கோப்பை தேநீரை இலவசமாக வழங்குகின்றது.

21-ஆம் ஆண்டு தீபாவளி சந்தையில், நவம்பர் 3 முதல் நவம்பர் 11 வரை, ஓபன் கார் பார்க் B, நேஷனல் ஸ்போர்ட்ஸ் கம்ப்ளெக்ஸ் புக்கிட் ஜாலில், நடைபெறுகின்றது.

பல்வேறு இடங்களில் இருந்து திரளாக வந்திருந்த மக்கள் BOH தேநீரை பருகி மகிழ்ந்தனர். மேலும் மிகச்சிறந்த தொகுப்பாளர்களான ஷாமினி, விக்கி,

விக்னேஸ்வரி மற்றும் லட்சுமி பக்கர் அவர்களால் நடத்தப்பட்ட பல்வேறு விளையாட்டுகளில் குறிப்பாக Guess the Tea, BOH Dart மற்றும் Spin & Win ஆகிய விளையாட்டுகளில் மக்கள் மிகவும் ஆர்வமாக பங்கேற்று மகிழ்ந்தனர்.

இச்சமுதாயத்தில் தங்களுடைய பங்கேற்பையும் அர்ப்பணிப்பையும் தெரிவுக்கும் விதமாக BOH நிறுவனம் இந்த திருவிழாவை ஒரு வாய்ப்பாக பயன் படுத்தியுள்ளது.

இத்திருவிழா மூலம் வரும் வருமானத்தில் ஒரு பங்கை சாய் பாண்டியன் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்க BOH நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

சுற்றுப்புற சூழலில் அதிக ஆர்வம் கொண்ட BOH நிறுவனம் தாங்கள் வழங்கும் தேநீர் கோப்பைகளை மறுசுழற்சி மற்றும் உணவு தர சான்றிதழ் பெற்ற தேநீர் கோப்பைகளை மட்டுமே பயன்படுத்தியுள்ளது.

BOH நிறுவனம் எப்பொழுதும் இச்சமுதாயத்தின் கலாச்சார விழிப்புணர்வையும் அதன் நிலைத்தன்மையையும் நிலைநாட்டுவதில் முக்கிய பங்கு அளிப்பதை பெருமிதத்தோடு தெரிவித்து கொள்கிறோம்.

இந்த தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமிகு விழாவாகவும், பிரகாசமாகவும் மாற்ற BOH நிறுவனம் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறது.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement