ஜசெகவுடன் ஒத்துழைக்கமாட்டோம் என்ற கொள்கையில் உறுதியுடன் மசீச


கோலாலம்பூர். ஜூலை 7 - 
நாங்கள் என்றும் ஜனநாயக செயல் கட்சியுடன் ஒத்துழைக்கப்போவதில்லை எனும் மனநிலையிலிருந்து மாறாமல் மலேசிய சீன சங்கம் மிக உறுதியுடன் இருக்கிறது.

தேசிய முன்னணியிலுள்ள மசீசவும் நம்பிக்கைக் கூட்டணியிலுள்ள ஜசெகவும் என்னதான் இன்று ஒருமைப்பாடு அரசாங்காத்தின் கீழ் இருந்தாலும் மசீச ஜசெகவிற்கு எதிரான தமது கொள்கையை இன்றும் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை.

மசீச பதவி அதிகாரத்திற்காக ஜசெகவுடன் இன்றைய அன்வார் இபுராஹிம் ஆட்சியின் கீழ் ஒத்துழைக்க விரும்பவில்லை என்று அதன் உதவித் தலைவர் தீ லியான் கெர் திட்டவட்டமாகக் கூறினார்.

மசீச சிறந்த வரலாற்றுப் பின்னணியையும் சிறந்த தலைத்துவத்தையும் கொண்டுள்ளதால் அது தனித்தே செயல்படும் என்று அவர் மேலும் சூளுரைத்தார்.

இதர அரசியல் கட்சிகள் போல மசீசவும் இன்றைய அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள சவால்களையும், தற்போதைய தேவையையும் கருத்தினில் புகுத்தி அதற்கேற்றார்போல் தொடர்ந்து செயல்படுவோம்.

எந்த ஒரு கட்சியுடனும் முக்கியமாக ஜசெகவுடன் இனி என்றும் ஒத்துழைக்க விரும்பவில்லை எனும் கொள்கையிலிருந்து நாங்கள் பின்வாங்கவில்லை, என்று திட்டவட்டமாகக் கூறினார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement