பிரேசிலின் புதிய நிர்வாகி கார்லோஸ் அன்சிலோட்டி


ரியல் மட்ரிட், ஜூலை 5- 
இத்தகவலை உறுதிப்படுத்துவதில்  ரியல் மட்ரிட்  மௌனம் மட்ரிட் - உலகப் புகழ்ப்பெற்ற காற்பந்து பயிற்றுனரான கார்லோஸ் அன்சிலோட்டி 'சம்பா' காற்பந்து உலகின் சிங்கமாக கர்ஜிக்கும் பிரேசில் அணியின் புதிய நிர்வாகியாகவிருக்கிறார்.

இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்தே அன்சிலோட்டி ஐந்து முறை உலகக் கோப்பையை வென்று சாதனைப் படைத்த ஒரே  நாடு எனும் பெருமையைக் கொண்டிருக்கும்  பிரேசிலை வழிநடத்தவிருக்கிறார் எனும் வதந்தி  பரவலாக பேசப்பட்டு வந்தது.

ஆயினும், தாம் தற்போது உலகில் சிறந்த கிளப் ரியால் மட்ரிட்டின் நிர்வாகியாக இருக்கிறேன், இந்த ஒப்பந்தத்தில் இருந்து நான் தவற விரும்பவில்லை என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஆயினும், ஐரோப்பாவைச் சேர்ந்த விளையாட்டு ஊடகங்கள் தொடர்ந்து இச்செய்தியை  தொடர்ந்து  பரப்பி வந்தனர்.

அவ்வகையில், இதுநாள் வரை பேசப்பட்டுவந்த செய்தியை மெய்ப்பிக்கும் வகையில் இன்று  அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டு காற்பந்து உலகை திக்குமுக்காட வைத்துள்ளது பிரேசில் காற்பந்து சம்மேளனம்.

பிரேசில் தேசியக் காற்பந்து குழுவின் புதிய நிர்வாகியாக ரியல் மட்ரிட் கிளப்பின் நிர்வாகி கார்லோஸ் அன்சிலோட்டி பொறுப்பேற்கவிருக்கிறார் என்றத் தகவலை  அந்தச் சம்மேளனத்தின் தலைவர் எட்னால்டோ ரோட்ரிகேஸ் இன்று போட்டுடைத்தார்.

ஸ்பேயின் லாலீகாவின் ரியல் மட்ரிட் கிளப்புடனான நிர்வாக ஒப்பந்தத் தவணைக்காலம் முடிந்ததும்  2024ஆம் ஆண்டில் அன்சிலோட்டி பிரேசில் தேசிக் காற்பந்துக் குழுவின் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் கோப்பா அமேரிக்கா காற்பந்து  கின்னம் தொடங்குவதற்கு முன் இத்தாலியைத் தனது பூர்வீகமாகக் கொண்ட அன்சிலோட்டி பிரேசில் குழுவிற்குத் தலைமையேற்பார் என்று ரோட்ரிகேஸ் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அதுவரையில், பிரேசில் லீக்கிலுள்ள ஃபுளுமினிஸ் குழுவை நிர்வகிக்கும் பெர்னான்டோ டினிஸ் தேசியக் குழுவை  தற்காலிகமாக வழிநடத்துவார்.

"பெர்னான்டோ காத்திருந்து அடுத்தாண்டின் மத்தியில் கார்லோசிடம்  தேசியக் குழுவின் நிர்வாகப் பொறுப்பினை முழுமையாக ஒப்படைப்பார்.

"மேலும், பெர்னான்டோவின் பயிற்சி  யுத்தியும் அன்சிலோட்டியின் பயிற்சி அனுகுமுறையிலும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை, இருவரது  பயிற்றுவிக்கும் திறனும் சமம்தான்.

"இதனால்தான் , பிரேசில் அணியை மீண்டும் அதன் சம்பா அடையாளத்தை மீட்டெடுக்க சரியான ஆள்  அன்சிலோட்டி என்று எங்கள் சம்மேளனம் அவரைத் தேர்வி செய்துள்ளது என்றார்.

கடந்த 2022ஆம் ஆண்டின் காத்தாரில் நடந்தேறிய உலகக் கின்னக் காற்பந்தாட்டத்தின் காலிறுதிச் சுற்றில் குரோஷியா அணியிடம் அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு, பிரேசில் தேசிய காற்பந்து அணியின் நிர்வாகியான தீத்தே பொறுப்பிலிருந்து விலகியதால் இன்று வரை அவ்வணி நிர்வாகியில்லால் இருந்தது.

கடந்த 1965ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பிரேசில் அணியை வழிநடத்தவிருக்கும் வெளிநாட்டு பயிற்றுனராக அன்சிலோட்டி திகழவிருக்கிறார்.

ஆயினும், இந்த புதியத் தகவலுக்கு அன்சிலோட்டியிடமிருந்து அல்லது ரியல் மட்ரிட் கிளப்பின் தலைமைத்துவமிடமிருந்து இதுவரை எந்த ஒரு பதிலும்  கிடைக்கவில்லை.

தற்போது 64 வயதுடைய அன்ன்சிலோட்டி கடந்த 2021ஆம் ஆண்டு முதல் லோஸ் பிலாங்கோஸ் குழுவை வழிநடத்தி வந்தார்.

இங்கிலாந்து பிரமியர் லீக் அணி  எவர்டன் குழுவின் தலைமைப் பயிற்றுனர் பொறுப்பிலிருந்து விலகியதும், ரியல் மட்ரிட் குழு அவரின் சேவையைப் பெற்றது.

தாம் இன்னும் காற்பந்து உலகின் தலைசிறந்த பயிற்றுனர்களில் ஒருவர் என்பதை நிரூபிக்கும் வகையில், ஐரோப்பிய வெற்றியாளார் கோப்பை, லாலீகா மகுடம், கோப்பா டெல் ரே ஸ்பேயின் அரச கின்னம், உலக கிளப் வெற்றியாளர் கின்னம் என அனைத்தையும்  வாரி குவித்துள்ளார்.

சென்ற வருடம் நடைபெற்ற ஐரோப்பிய வெற்றியாளர் கின்ன இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் லிவர்பூல் கிளப்பைத் தோற்க்கடித்து அன்சிலோட்டி நிர்வாகியாக 4ஆவது முறை அக்கோப்பையை வென்றுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன், இத்தாலி சீரிஆ லீக்கின் ஏசி மிலான் குழுவுடன் அவர் இருமுறை ஐரோப்பிய வெற்றியாளார் கின்னத்தை வென்றுள்ளார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement