எதிரியையும் மன்னித்து அரவணைக்கும் நல்ல மனிதர் சலாவுடின் அயுப்

அரசியல் தலைவர்கள் புகழாரம்




கோலாலம்பூர், ஜுலை 23 - 
தனது எதிரிகளையும் மன்னித்து அரவணைக்கும் நற்குணம் கொண்டவர் என்று சற்றுமுன் இரவு 9.23 மணிக்கு இயற்கை எய்திய உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்வாதார அமைச்சர் சலாவுடின் அயுப் பற்றி அரசியல் தலைவர் புகழாரம் சூட்டினார்.

அகலா மரணமடைந்த அன்னாரின் துணையமைச்சராக வெளான்மை அமைச்சில் சேவையாற்றிய சிம் சீ சீன் கூறுகையில் அன்னாருடன் சேவையாற்றிய தருணம் வாழ்வின் இனிமையானது என்று கீச்சகத்தில் அன்னாரின் இரங்கலைப் பகிர்ந்து கொண்டார்.

“சீம், நான் ஏன் அன்றாடமும் பொலிவுடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று தெரியுமா?

ஒவ்வோர் இரவும் உறங்குவதற்கு முன் நான் இறைவனைப் பிரார்த்திப்பேன், என் எதிர்களையும் மனதைப் புண்படுத்தியவர்களையும் மன்னித்துவிடுவேன், பிறகுதான் நான் நித்திரையில் ஆழ்வேன், என்று அடிக்கடி என்னிடம் சொல்வார் என்றார்.

மேலும், இதுதான் தாம் அவரிடம் கற்றுக்கொண்ட பாடம் என்று சீம் தனது அன்னாரின் இழப்பின் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement