உள்நாட்டு வாணிபம் வாழ்வாதார அமைச்சர் சலாவுடின் அயுப் இயற்கை எய்தினார்!


கோலாலம்பூர், ஜூலை 23 - 
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்வாதார அமைச்சர் சலாஹுடின் அயுப் இன்றிரவு காலமானார்.

பாக்காத்தான் கூட்டணி கட்சி அமானாவின் துணைத் தலைவருமாகிய அவர் அலோர்ஸ்டாரிலுள்ள சுல்தான பாஹியா அரசாங்க மருத்துவமனையில் இரவு மணி 9.23க்கு இயற்கை எய்திய துக்ககரமான செய்தியை அதிகாரப்பூர்வமாக மூலை அறுவை மருத்துவ நிபுணர்கள் அறிவித்தனர்.

61 வயதான பூலாய் நாடளுமன்ற உறுப்பினருமாகிய அன்னாரின் பூத உடலை தஞ்சோங் பியாயிலுள்ள கம்போங் செர்காடில் இருக்கும் அவரின் இல்லத்துக்கு இறுதி மரியாதை மற்றும் நல்லடக்கத்திற்காக கொண்டு செல்வதற்கு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருவதாக அன்னாரின் பத்திரிகைச் செயலாளரான ஷகிரின் உஸ்னால் அரிக்கை ஒன்றில் கூறினார்.

அதற்கு முன்னதாக அன்னாரின் புதல்வியான பத்தியா சலாஹுடின் தந்தையின் இறப்பு குறித்த தகவலை அகப்பக்கத்தில் பதிவேற்றிருந்தார்.

இதனிடையே அன்னாரின் நல்லடக்கம் குறித்த தகவல்கள் விரைவில் பகிரப்படும் என்று ஷகிரின் தெரிவித்தார்.

அன்னாரின் உடல்நலத்திற்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் சிகிச்சை வழங்கிய மருத்துவர்களுக்கும் குடும்பத்தினரும் அமைச்சும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை இரவு வாந்தி காரணமாக சலாஹுடின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

பிறகு சனிக்கிழமை காலை அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதை உறுதிபடுத்தப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பிறகு அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிரமாகக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement