காற்பந்து உலகிலிருந்து ஓய்வு பெறுகிறார் செக் பெப்ரிகாஸ்


ரியல் மட்ரிட், ஜூலை 2 - 
பார்சிலோனாவின் முன்னால் நட்சத்திர அட்டக்காரரும் ஸ்பெயின் தேசிய காற்பந்து வீரருமான செக் ஃபாப்ரிகாஸ் காற்பந்து உலகில் இருந்து நிரந்தர ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவர் இங்கிலாந்து பிரமியர் லீக் கிளப்பான செல்சியின் முன்னாள்  ஆட்டக்காரரான அவருக்கு  தற்போது  36 வயதாகிறது.

இவர் முதலில் ஆர்சன் வெங்கரின் கீழ் ஆர்சனல் கிளப்பிற்கும் விளையாடியதோடு மட்டுமின்றி செல்சியுடன் இரு இங்கிலாந்து பிரமியர் லீக் கின்னத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு ஸ்பெயின் லா லீகாவில் பார்சிலோனாவிற்கு விளையாடி லீக் கின்னத்தை வென்றுள்ளார்.

மேலும் ஸ்பெயின் அணியைப் பிரதிநிதித்து உலகக் கின்னத்தையும் ஐரோப்பியக் கின்னத்தையும் வென்றுள்ளார்.

தேசிய அணிக்கு இவர் 2006ஆம் ஆண்டு தொடங்கி 10 வருடங்கள் 110 முறை அனைத்துலக அரங்கில் ஜொலித்துள்ளார்.

ஓய்வு பெற்றுள்ள இவர் தற்போது ஸ்பெயின் சீரி பி லீக்கின் கோமோ எனும் கிளப்பிற்கு பயிற்றுனராக நியமிக்கப்பட்டுள்ளதால் அங்கு விரைவில் தமது சேவையைத் தொடங்கவுள்ளார்

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement