மூளையில் இரத்தக்கசிவு : அவசர சிகிச்சை பிரிவில் வேன் டெ சர்

குணமடைய உலக ரசிகர்கள் பிரார்த்தனை


குரேஷியா, ஜுலை 8 - 
உலகில் தலைசிறந்த கால்பந்து குழுவில் ஒன்றான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கோல் பாதுகாவலர் எட்வின் வேன் டே சர் மூளையில் ஏற்பட்டுள்ள இரத்தக் கசிவு காரணமாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அந்நாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலாவில் ஈடுபட்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை அந்நாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சிகிக்சை தந்த மரு‌த்துவ‌ர்க‌ள் வேன் டே சர் மூளையில் இரத்தக் கசிவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று உறுதிப்படுத்தினர்.

ஆயினும் தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார். மருத்துவர்களும் அவரது உடல் நிலையைத் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

கடந்த மே மாதத்தில் அயாஸ் கிளப்பின் தலைமை நிர்வாகி பதவியை அவர் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது கால்பந்து ரசிகர்களும் சக முன்னாள் ஆட்டக்காரர்களும் அவர் நலமுடன் திரும்ப இறைவனை வணங்குகின்றனர்.

வேன் டே சர்  சுமா‌ர் 200 க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் ரெட் டெவில் கிளப்புக்கு விளையாடியுள்ளார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement