ஆகஸ்டு 12, 6 மாநிலங்களில் பொதுத்தேர்தல் - தேர்தல் ஆணையம்


புத்ராஜெயா, ஜூலை 6 - 
எதிர்வரும் ஆகஸ்டு 12ஆம் நாளன்று கெடா, பினாங்கு, சிலாங்கூர், நெகிரி செம்பிலான், கிளந்தான், திரங்காணு ஆகிய ஆறு மாநிலங்களிலும் சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்களிப்பு நடைபெறும்.

புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைப்பெற்ற தேர்தலை நிர்ணயிக்கும் சிறப்புக் கூட்டத்திற்குப் பின் 12 மணியளவில் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் கானி சால்லே தனது தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் கூட்டத்தில் தேர்தல் நாளை அறிவித்தார்.

இதனிடையே, வேட்புமனு தாக்கல் ஜூலை 29 நாள் நடைபெறவிருக்கிறது. பிறகு, ஆகஸ்டு 8ஆம் தேதி ஆரம்ப வாக்களிக்கும் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தலுக்கான பிரசாரம் 14 நாட்களுக்கு நடைபெறும் என்றும் அப்துல் கானி உறுதிபடுத்தினார்.

சென்றாண்டு பொதுத் தேர்தலில் பங்கேற்காதாதால் இம்முறை சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் கடந்த ஜூன் 28ம் திகதி தொடங்கி ஒவ்வொரு மாநில சட்டமன்றங்களும் வரிசையாக கலைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement