அம்னோவை ஆட்சிக்குழுவில் அமர்த்த பினாங்கு மாநில அரசாங்கத்துக்கு ஆட்சேபனை இல்லை

முதலில் அம்னோ மாநிலத் தேர்தலில் வெற்றி பெறட்டும்


ஜார்ஜ்டவுன், ஜூன் 9 - 
அம்னோவை ஆட்சிக்குழுவில் அமர்த்துவதற்கு பினாங்கு மாநில அரசாங்கத்திற்கு எந்த ஒரு ஆட்சேபனையும் கிடையாது.

ஆயினும், அதற்கு முன் எதிர்வரும் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் அம்னோ வெற்றி பெறவேண்டும் என்று அம்மாநில முதல்வர் சோவ் கொன் யியோவ் திட்டவட்டமாகக் கூறினார்.

மாநில அரசாங்கத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்படுவதற்கு முன் அம்னோ முதலில் தாம் போட்டியிடும் சட்டமன்றத் தொகுதியில் வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

கடந்த 15ஆம் பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய ஓருமைப்பாடு அரசாங்கத்தை அமைப்பதற்கு முன் ஒப்பந்தமான உடன்படிக்கைக்கு ஏதுவாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஆகவே இந்த ஒருமைப்பாடு ஒப்பந்தமும் ஒத்துழைப்பும் ஆறு மாநிலங்களில் விரைவில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் பின்பற்றப்படும், ஆயினும் அது தேர்தல் முடிவைப் பொருத்தது என்று அவர் மேலும் கூறினார்.

ஆகவே அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் அறிக்கை இன்றைய அரசியல் சூழல். அனைத்து கட்சிகளையும் ஒரே புதிய கூட்டமைப்பிற்குள் கொண்டுவந்துள்ளதைக் காட்டுவதாக கொன் யியோவ் மேலும் தெரிவித்தார்.

மாநிலத் தேர்தல் முடிவுதான் ஆட்சிக்குழுவில் அம்னோ பிரதிநிதி அங்கம் வகிக்கமுடியுமா என்று தீர்மானிக்கும் என்றார்.
 
இங்குள்ள சுங் ஹுவா கொன்பூசியன் பள்ளி நிகழ்வில் கலந்து கொண்ட பின் நிருபர்களின் கேள்விகளுக்கு இவ்வாறு கருத்துரைத்தார்.

இதற்கு முன் இன்று அம்னோ மாநாட்டில் உரையாற்றிய துணைப்பிரதமருமான ஜாஹிட், நம்பிக்கைக் கூட்டணியின் ஆட்சியில் இருக்கும் பினாங்கு,சிலாங்கூர்,நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தில் அம்னோ பிரதிநிதியும் அங்கம் வகிக்க வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தார்.

சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இம்மாநாட்டில் பிரதமர் அன்வார் இபுராகிம் கலந்துகொண்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement