கிள்ளான், ஜூன் 8 -
ஆடவர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல் துறையால் தீவிரமாக வலைவீசி தேடப்பட்டுவந்த இந்திய ஆடவர் ஒருவர் இறுதியில் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
பிரகாஸ் ராவ் @ ரைடர் எனும் அடைப் பெயரைக் கொண்ட சுமார் 41 வயதுமிக்க அந்த உள்நாட்டு ஆடவர் இங்குள்ள ஷா ஆலமிலுள்ள ஶ்ரீமூடா காவல் நிலைய அதிகாரி கொண்ட குற்றவியல் குழுவால் நேற்றிரவு 9.50 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளான்.
தென் கிள்ளன் மாவட்ட காவல் தலைமையகத்தின் தலைவர் உதவி ஆணையர் சா ஹூங் போங் இத்தகவலை இன்று காலையில் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.
மேலும் இன்று காலையில் அந்த நபரை கிள்ளான் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காவல் துறை ஆஜர் படுத்தியதாகக் கூறினார்
அந்த ஆடவனை எதிர்வரும் ஜூன் 14 வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வாங்கப்பட்டுள்ளதாக சா மேலும் கூறினார்
கடந்த மே 26 தேதி நடந்த அச்சம்பவத்தில் பிரகாஸ் ராவ் 34 வயதுடைய ஆடவர் ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட ஆடவர் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்துவிட்டதாக காவல் துறை உறுதிப்படுத்தியது.
மேலும் அந்த ஆடவரின் உடலில் 27 வெட்டுக்காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையின் வழி உடற்கூறு நிபுணர் உறுதிபடுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தை காவல் துறையினர் உட்பிரிவு 302 தண்டனை சட்டத்தின் கீழ் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks