கோலாலம்பூர், ஜூன் 7 -
சாலையின் வளைவில் எதிரே உள்ள காரை அபாயகரமாக முந்திச் செல்ல முயன்ற ஓர் பெண் ஒருவரைத் தலையில் அடித்த ஆன் நபரை காவல் துறை கைது செய்துள்ளது.
இச்சம்பவம் கடந்த ஞாயிரன்று பாதிக்கப்பட்ட பெண் கேமரன் மலையிலிருந்து தாப்பா நோக்கி பயணித்தபோது நிகழ்ந்தது.
அந்த 45 வயதுமிக்க ஆடவர் தாப்பாவில் கைது செய்யப்பட்டதை பேராக் காவல் படைத் தலைவர் ஆணையர் முகமட் யுஸ்ரி ஹஸ்ஸான் நேற்று வெளியிட்ட அறிக்கையில் உறுதிபடுத்தினார்.
சம்பவத்தின் போது அப்பெண் தனது 17 வயதுடைய சகோதரனுடன் கேமரன் மலையிலிருந்து தாப்பா நோக்கி லத்தா இஸ்கண்டார் வழி நெடுஞ்சாலையில் தலைநகரம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அப்பெண் சாலை வளைவொன்றில் எதிரே உள்ள காரை முந்திச் செல்ல முற்பட்டு இயலாமல் போனது. அப்போது எதிரே காரைச் செலுத்திய சிலாங்கூரைச் சேர்ந்த ஆடவர் அப்பெண்ணின் செயலால் கோபப்பட்டு நடுவிரலை ஆபாச எச்சரிக்கையாக காட்டியுள்ளார்.
சிரிது தூரம் சென்றதும் சாலை நெரிசல் காரணமாக வாகனங்கள் நின்றதும் அந்த ஆடவர் காரிலிருந்து திடீரென இறங்கி பெண் கார் ஓட்டுபவரை நோக்கி வந்தான்.
எதிர்பாராத விதமாக அப்பெண்ணைத் தகாத வார்த்தைகள் திட்டியதோடுமட்டுமில்லாமல் சந்தேகத்துக்குறிய அந்நபர் திடீரென அப்பெண்ணின் தலையில் தாக்கினார்.
தலைநகரம் வந்தடைந்த பாதிக்கப்பட்ட அப்பெண் அச்சம்பவம் தொடர்பாக காவல் துறையில் புகார் ஒன்றை பதிவு செய்தார்.
அப்புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல் அதிகாரிகள் குற்றம் புரிந்த அந்த ஆடவர் செர்டாங் சிறு கெம்பங்கானிலுள்ள ஒரு தொழிற்சாலையின் மேற்பார்வையாளர் என்று தெரிய வந்துள்ளது.
அதுமட்டுமின்றி சம்பவத்தின் போது அந்நபர் பயன்படுத்திய கார் ஒரு பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
தீவிர தேடுதலுக்குப் பின் அந்த ஆடவன் தாப்பாவில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு தாப்பா மாவட்ட காவல் தலைமை அலுவலகத்துக்கு மேல் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டான் என்று யுஸ்ரி கூறினார்
தற்போது அந்த ஆடவன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு தீவிரமாக விசாரிக்கப்பட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks