புக்கிட் அமான் இன்று சனூசியிடம் வாக்குமூலம் சேகரிப்பு


கோலாலம்பூர், ஜூன் 7 - 
பினாங்கு மாநிலம் வரலாற்று அடிப்படையில் உண்மையிலேயே கெடாவிற்குச் சொந்தம் என்று கூறி நாட்டில் தற்போது சர்ச்சையை உண்டாகியுள்ள கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நோரிடம் காவல் துறை இன்று புதன்கிழமை வாக்குமுலம் பெறவிருக்கிறது.

இந்த சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டு அரசியலில் விவாதத்தையும் மக்களின் கடும் சினத்திற்கும் ஆளான சனூசியின் மீது பினாங்கு மாநில காவல் படை புகார் ஒன்றை பெற்றது.

அப்புகாரைத் தொடர்ந்து காவல் துறை குற்றப்பத்திரிக்கையை திறந்து விசாரணையை முடக்கி விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவ்வகையில் இன்று புதன்கிழமை காவல் துறை சனூசியிடம் அலோர் ஸ்டாரிலுள்ள அவருடைய மந்திரி புசார் அதிகாரப்பூர்வ அலுவலகத்தில் விசாரணைக்கு உதவுவதற்காக வாக்குமூலம் பதிவு செய்யப்படும்.

அரச மலேசிய காவல் படையின் செயலாளர் துணை ஆணையர் நூர்சியா முகமட் சாடுடின் நேற்று நள்ளிரவில்  வெளியிட்ட அறிக்கையில்  இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

இவ்விவகாரம் தொடர்பாக காவல் துறை சனூசி மீதான விசாரணைய தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த சம்பவத்தை உட்பிரிவு 505B தண்டனைச் சட்டத்தின் கீழ் அனாவசியமாக மக்கள் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் அச்சத்தை விளைவிக்கக்கூடிய அறிக்கையை வெளியிட்ட குற்றத்திற்காக மிகத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

காவல் துறை குற்ற விசாரணை முறைச் சட்டம் உட்பிரிவு 112 இன் கீழ் வாக்குமூலம் பெறப்படுவதாக நூர்சியா மேலும் கூறினார்.

மேலும் தவறான முறையில் தகவல் தொடர்பினை பயன்படுத்தியச் சந்தேகத்தின் பெயரில் உட்பிரிவு 233, 1998 ஆண்டு தொலைத்தொடர்பு பல்லூடகச் சட்டத்தின் கீழும் சனூசி விசாரிக்கப்படுகின்றார்.

புக்கிட் அமான் குற்றவியல் துறையிலுள்ள பட்டியலிடப்பட்ட சிறப்புக் குற்ற விசாரணைப் பிரிவு அல்லது யூ எஸ்ஜெடி குழு மிகத் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக நூர்சிய கூறினார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement