பெட்டாலிங் ஜெயா, ஜூன் 12 -
பிரபல நட்சத்திர ஆட்டக்காரரும் உலக கிண்ண வெற்றியாளருமான லையொனெல் மெஸ்சி அமேரிக்க இண்டர் மயாமி காற்பந்துக் குழுவில் இணைகிறார்.
பிரபல காற்பந்து நிருபர் பாப்ரிஜியோ ரோமானோ இத்தகவலை தமது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதற்கு முன் பிஎஸ்ஜிக்கு விளையாடி வந்த மெஸ்சி அரேபிய லீக் குழுவிற்கு செல்லவிருப்பதாக பரவலாகப் பேசப்பட்டது.
அதுமட்டுமின்றி தமக்கு அடையாளம் தந்த பார்சலோனா குழுவிற்கு மீண்டும் திரும்பும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் வதந்திகள் பரவின.
ஆயினும் அத்தகவல்கள் அனைத்தையும் பொய்யாக்கும் விதத்தில் மெஸ்சி அமெரிக்காவின் எம்எல்எஸ் லீக்கில் முன்னாள் மென்செஸ்டர் யூனைடெட் மத்திய ஆட்டக்காரரான டேவிட் பெக்கமின் இண்டர் மயாமி குழுவில் இணைவது உறுதியானது.
இத்தகவலை உறுதியாக்கும் விதத்தில் முகநூலில் பேசிய மெஸ்சி, பார்சலோனா அவரை வாங்கும் முயற்சியில் கடைசி நிமிடம் வரை போராடியதாக அம்பலப்படுத்தினார்.
ஆயினும் அங்கே தற்போது நிலவரம் சரியில்லாததால் இண்டர் மயாமியைத் தேர்வு செய்ததாகக் கூறினார்.
மேலும், பணம் எனது நோக்கமல்ல என்றும் அப்படி இருந்தால் தாம் அதிக சம்பளம் கொடுக்கத் தயாராக இருக்கும் அரேபிய லீக் குழுவில் எப்போதோ இணைந்திருக்க முடியும் என்றார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks