சியாங் மாயில் காணாமல் போன மலேசிய பெண்ணின் தாயார் தாய்லாந்து சென்றடைந்தார்


கோலாலம்பூர், ஜூன் 7 - 
சுற்றுலாவிற்குச் சென்றிருந்த மலேசிய சீனப் பெண் ஒருவர் சியாங் மாயில் காணாமல் போன மாயம் குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக அப்பெண்ணின் தாயர் அந்த அண்டை நாடு சென்றடைந்தார்.

அங்கு அவர் தாய்லாந்தின் சுற்றுலா காவல் அதிகாரிகளுடன் விசாரணைக்காக சந்திப்பு நடத்தவிருக்கிறார். நேற்று தனது மகனுடன் அம்மாது தாய்லாந்து சென்றிரடைந்துள்ளார்.

சோங் சும் யீ அல்லது எஞ்சி சோனா சும் எனும் அடைப்பெயரைக் கொண்ட அந்த பெண் காணாமல் போனது குறித்து கடந்த ஜூன் 2ஆம் தேதி அரச மலேசிய காவல் படை புகார் ஒன்றை அப்பெண்ணின் தாயிடமிருந்து பெற்றது.

தாய்லாந்து சுற்றுலாத்துறை காவல் அதிகாரிகளுடன் காணாமல்போன  பெண்ணின் தாயும் சகோதரனும் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர்

இன்று வரை அந்தப் பெண் மாயமானது குறித்தும் இருப்பிடம் குறித்தும் எந்த ஒரு தகவலும் இல்லாத நிலையில் தாய்லாந்து காவல் துறை அதன் தீவிர விசாரணையை முடக்கி விட்டுள்ளது.

இதனிடையே அரச மலேசிய காவல் படையும் அரச தாய்லாந்து காவல் படையின் ஒத்துழைப்போடு மாயமான அந்த மலேசியப் பெண்ணைத் தேடும் முயற்சியில் தீவிரம் காட்டி வருவதாக புக்கிட் அமான் இன்று வெளியிட்ட அறிக்கையில்  குறிப்பிட்டது.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement