மாணவர்களின் உன்னத வெற்றியை மேம்படுத்த கலாச்சாரம், கல்வி திட்ட உறுமாற்றம் அவசியம்


கோலாலம்பூர், ஜுன் 28 - 
நாட்டின் கல்வி நீரோடையிலிருந்து சிதறிய பிரச்சனை, எஸ்பிஎம் போன்ற முக்கிய தேர்விற்குச் செல்லாதது ஆகியவற்றுக்கு கல்வி அமைச்சு முதன்மை முக்கியத்துவம் வழங்க வேண்டும்.

மாணவர்களின் படைப்பாற்றல் சாதகமான, பொருத்தமான கல்வி கலாச்சாரத்தை அவர்களிடத்தில் புகுத்துவதற்கு நாட்டின் கல்வி அமைச்சு முயற்சிக்க வேண்டும் என்று சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ராமராஜ் அறைகூவல் விடுத்தார்.

அன்மைய காலமாக நாளிதழ்களில் அச்சிடப்பட்டது போல 2019 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் எஸ்பிஎம் முக்கிய தேர்வுக்கு அமராத மாணவர்களின் எண்ணிக்கை 211,000-ஐ தாண்டியுள்ளதாக கல்வி அமைச்சு மக்களவைக் கூட்டத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது, பள்ளி அளவிலான கல்வி சுழற்சி தனித் திறமையுடன் பிறக்கும் மாணவர்களின் ஆர்வத்தில் மிகக் குறைவான  அக்கறையே செலுத்தப்படுகிறது என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

நமது நாட்டிலுள்ள கல்வித் திட்டம் படி என்று மாணவர்களுக்கு  அழுத்ததையும்  சுமையையும் கொடுக்கும், கட்டுப்படுத்தும் திட்டமாக இருக்கக்கூடாது.

யாராவது ஒரு மாணவன் விளையாட்டு திறனில் ஆர்வம் நாட்டமும் கொண்டிருந்தால், பள்ளியின் கல்வித் திட்டமும், சூழலும் அவனுக்கு ஊக்குவிப்பை அளித்து அத்துறையில் அம்மாணவன் சாதனைப் படைக்க உதவ வேண்டும்.  இதைத்தான் சுடர் விளக்காயினும் தூண்டுகோள் வேண்டும் என்பார்கள். 

மலேசியாவில், எனது பள்ளிப் பருவம் தொடங்கியே நீங்கள் அனைவரும் தேர்வில் நல்ல தேர்ச்சி பெற்று வெற்றி அடையவில்லை என்றால் நமது எதிர்காலமே சூனியமாகிவிடும் என்று மாணவர்களை ஆசிரியர்கள் ஐயுருத்துவர்.

ஆனால், இன்றைய நிஜ வாழ்க்கையில் எல்லாம் நேர்மறையாக நிகழ்கிறது நம்மை சுற்றி நடப்பதைப் பார்க்கும் போது நிறைய தொழில் வள்ளுனர்கள், இதரத் துறைகளில் சாதனைப் படைத்தவர்களும் சரி அவர்கள் ஒருகாலத்தில் ஒளிமயமான எதிர்காலமற்ற மாணவர்கள் என்று அவர்களுக்கு சிறப்பாக போதிக்கவேண்டிய மனிதர்களால் முத்திரை குத்தப்பட்டவர்களாவர்.

கல்விமன்களாக இருக்கட்டும், பெற்றோர்களாக இருக்கட்டும் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதே நமது கடமையே தவிர அவர்களின் எதிர்கால தலைவிதியைக் கணிக்கும் ஜோதிட நிபுணராக நடந்துக் கொள்ளக்கூடாது.

பள்ளிகளிலுள்ள கற்றல் கற்ப்பித்தல் முறை ஒவ்வொரு துறையிலும் இருக்கும் மாணவனின் ஆற்றலை வெளிக்கொனரும் கருவியாக இருக்கவேண்டுமே தவிர இல்லாத ஒரு எதிர்கால இலட்சியத்துக்காக போராடி  வெற்றியடையும்படி அழுத்தத்தையோ கட்டாயப்படுத்தவோ கூடாது.

இது மிக மிகத் தவறான அணுகுமுறையாகும், இது  ஆசிரியர்கள் மட்டுமின்றை பெற்றோர்களுக்கும் பொருந்தும். உங்களின் நிரைவேறாத கனவுகளை மாணவர்களிடத்தில் திணிக்க வேண்டாம். 

கல்வி அமைச்சும் மடானி  அரசாங்க அமைச்சரவையும் அரசியல் புரிதல்  போல இஷ்டம் போல  மாற்றும், நாளுக்கு நாள் சிதறி வரும் உலக கல்வியைப் பற்றி  சிறிது அக்கரை எடுத்து மதிப்பீடு செய்ய வேண்டும்.

முக்கியமாக இடைநிலைப் பள்ளிகளில் பயில்கின்ற நமது மாணவப் பிள்ளைகள் வாழ்க்கை தத்துவம் சார்ந்த திறன் கல்வி பயில்வதற்கு வாய்ப்பினை பெரிய அளவில் வழங்க வேண்டும்.

இந்த வாழ்க்கை சார்ந்த திறன் கல்விதான் அவர்களை சிறப்பாக வழிநடத்தி  உயர்கல்வியில் சாதனைப் படைத்து தொழிலில் உயர வழிவகுக்கும்.

மேலும் மாணவர்களிடத்தில் ஒப்பீடு செய்யும் கலாச்சாரத்தை என்றுமே அமலாக்கக் கூடாது காரணம் அவர்களில் சிலர் கூடுதல் கணிதத் தேர்வில்  தேர்ச்சி அடையாமல் இருக்கலாம் ஆனால் அவர்களின் ஆர்வமும் திறமையும்  லியோனார்டொ டா வின்சி படைப்புகள் போன்ற ஓவியங்களில் மறைந்துள்ளதை  நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எவ்வளவு நாள் நமது பள்ளிக் கல்வித் திட்டம் கல்வித் தேர்வில் குறைந்த அடைவு நிலையைப் பெற்றுள்ள மாணவர்களை மட்டம் தட்டிக் கொண்டிருக்கப் போகிறது, காரணம் அவர்கள் நேசிக்காத ஜீவிக்காத விஷயத்தில் நாம் மதிப்பீடு செய்து கொண்டிருக்கிறோம்.

அதுமட்டுமில்லாமல், எவ்வளவு காலத்துக்கு நாம் அவர்கள் எதிர்காலத்தை நிச்சயிக்கும் என்று நம்பக்கூடிய தேர்வு சார்ந்த கல்வி வழக்கத்தை வைத்து மாணவர்களை நாம் பயமுறுத்தப் போகிறோம் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று  அவர் நினைவுப்படுத்தினார்.

தயவு செய்து பின்லாந்து நாட்டின் கல்வித் திட்டத்தைப் பார்த்து நாம் பாடம் கற்றுக் கொள்வோம். அந்நாட்டில் அமலாக்கப்படும் கல்விக் சித்தாந்தத்தின் வழி கல்விக் கட்டொழுங்கு, தேர்வு மட்டுமே முழுமையாக சார்ந்திராமல் முற்றிலும் புத்தாக்க, படைப்பாற்றல் சிந்தனையைக் கொண்ட மாணவர்கள உறுவாக்கி வெற்றிக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு ஏன், சுவிட்சர்லாந்து , ஹங்கேரி போன்ற நாடுகளும் தொழில்திறன் கல்வியைப் பள்ளிகளில் போதிப்பதற்கான திட்டத்தை நோக்கி செயல்படத் தொடங்கியுள்ளது.

இந்த தொழில்திறன் கல்வியானது ஒரு துறையில் மாணவனின் ஐடியலிசம், முதிர்ச்சி, திறன் ஆகியவற்றை வெளிக்கொணர்ந்து அவர்களின் எதிர்கால தொழிலுக்குப் பொருத்தமான வாய்ப்பை உருவாக்க வல்லது.

தனிப்பட்ட முறையில், நான் இணைய விளையாட்டினை பள்ளியில் ஒரு புறப்பாட நடவடிக்கையாக அமலக்க வேண்டும் என்ற இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யியோவின் பரிந்துரையை அமோகமாக வரவேற்கிறேன்.

இந்த இணைய விளையாட்டின் மூலம் பள்ளி கல்வி போதனையால் வெறுத்து  இலைமறைக்காயாக இதுநாள் வரை இணைய நிலையங்களில் மட்டுமே  காட்டி வந்து பொதுவெளியில் வெளிக்கொணரப்படாமல் இருக்கும் மாணவர்களிடத்தில் புதைந்துள்ள திறமைகளை கண்டுபிடித்து பட்டைத் தீட்டி அவர்கள் அதில் இன்னும் சிறப்பாக ஜொலிக்க வாய்ப்பை அளிக்கும் என்பது தின்னம்.

இந்த பரிந்துரையை கல்வி அமைச்சு எடுத்து தீவிரமாக ஆராய வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

மாணவர்கள், பெற்றோர்களைப் போல நமது நாட்டின் கல்வித் துறை உறுமாற்றம் பெற்று சிறந்த எதிர்கால தலைவர்களை  உருவாக்குவதில் வெற்றி பெற வேண்டும் என்று நானும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏந்தி காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement