அழுத்தம், தடைகள் காரணமாக மஇகாவிலிருந்து சிவராஜ் திடீர் விலகல்

மேலவை உறுப்பினராக இனி தடையின்றி மக்களுக்குச் சேவையாற்றுவேன் என்று திட்டவட்டம்


கோலாலம்பூர்  ஜூன் 27 - 
மஇகாவின் முன்னால் தேசிய உதவித் தலைவரும், தற்போதைய தாமான் புக்கிட் குச்சாய் பாரு கிளையின் நடப்புத் தலைவருமான ச. சிவராஜ் அக்கட்சியில் இருந்து இன்று உடனடியாக வெளியேறிவிட்டதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

தன் மீது கட்சியின் தலைமைத்துவம் பல வித தடைகளையும் தட்டுப்பாடுகளையும் தொடர்ந்து  கட்டவிழ்த்து விடுவதால் அக்கட்சியை விட்டு உடனடியாக விலகுவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் மேலவை உறுப்பினருமான சிவராஜ் உறுதிப்படுத்தினார்.

இப்படி எந்த தரப்பினரிடம் இருந்தும் குறிப்பாக மஇகா கட்சியின் தலைமத்துவத்திலிருந்து இதுபோன்ற பல வித சிக்கல்களையும் தடைகளையும் பெறுவதைவிட நான் அங்கிருந்து  வெளியேறி  எந்த ஓர் இடையூறுகளும் தொந்தரவுகளும் இல்லாமல் மேலவை உறுப்பினராக மக்களின் முக்கியப் பிரச்சனைகளுக்கு  செவையாற்றுவதே என் முதன்மை லட்சியம் என்று அவர் சூளுரைத்துள்ளார்.

தலைவர் விக்னேஸ்வரன் தலைமையிலுள்ள மஇகாவில் நிறைய எதிர்பாராத  நிகழ்வுகளும் சம்பவங்களும் கட்சிக்குள் அரங்கேறியதால் நான் இந்த முடிவிற்கு வந்தேன்  என்று அவ்வ்வறிக்கையில் மேலும் கூறினார்.

கட்சியிலுள்ள சில தரப்பினர் அவர்களின் அங்கத்துவத்திற்கு தம்மை ஓர் பேராபத்தாகவும், எதிரியாகவும் பார்ப்பதால் தாம் இந்திய மக்களின் தாய் கட்சியியாக போற்றப்படும் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

“இதில் மிக வேதனைக்குறிய விடயம் என்னவென்றால், நான் நாட்டுக்கும் இந்திய சமூதாயத்திற்கும் சேவையாற்றாமல் இருக்க என்னை கட்சியில் இருப்பவர்கள் சிலர் பல விதங்களில் கீழறுப்பு வேளயில் ஈடுபட்டு என்னைத் தடுக்கின்றனர்.

"இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், இது நிச்சயம் மஇகாவில் இருக்கும் கட்சி உறுப்பினர்களிடையே  பிளவை ஏற்படுத்தி ஒற்றுமையைச் சீர் குழைக்கும் என்று அஞ்சியதால் உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறினேன்.

"உண்மையைச் சொன்னால் கட்சி பிளவுபடவும், கருத்து வெறுபாட்டினால் ஒற்றுமை  சீர்குழையவும் நான் முக்கியக் காரணமாக இருக்க விரும்பவில்லை, கட்சியில் எதிர்காலம் கருதிதான் நான் இன்று  விலகினேன், என்று சிவராஜ் பகிரங்கப்படுத்தினார்.

கடந்த 20க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சிவராஜ் மஇகாவில் அங்கத்துவம் வகித்து வந்த வேளையில், தேசிய இளைஞர் பகுதித் தலைவர்,உதவித் தலைவர் என பல முக்கிய பதவிகளை அலங்கரித்தார்.

அதுமட்டுமின்றி, கடந்த  14ஆம் பொதுத் தேர்தலின்போது  கட்சியின் சார்பாக கேமரன் மலையில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவராஜீன் இந்த திடீர் விலகல் குறித்து விக்னேஸ்வரன் வெகு விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement