கோலாலம்பூர், ஜூன் 21 -
ஒருபுறம் இயந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதகுளம் உச்சக்கட்ட சுயநலத்துக்காக பேராசையோடு அளவுக்கு அதிகமாக பூமியில் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து தங்களின் அன்றாட தேவைக்காக விரயமாக்குகின்றனர்.
இதனால் நாம் வாழும் பூமி 1993 மற்றும் 2010 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 80 சென்டிமீட்டர் கிழக்கே சாய்ந்து உள்ளதாக விஞ்ஞானிகள் அண்மையில் ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக பூமியின் காலநிலையில் பெரிய பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் அவர்கள் மற்றொரு தகவலையும் தெரிவித்துள்ளனர்.
ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ் என்னும் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆராய்ச்சி தகவலில் 1993ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை மட்டும் மொத்தம் 2,150 ஜிகா டன் நிலத்தடி நீர் மனிதர்களால் இதுவரை உறிஞ்சி எடுக்கப்பட்டுள்ளது என்றும், இது 6 மில்லிமீட்டருக்கும் அதிகமான கடல் மட்ட உயர்வுக்கு சமம் என கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி, இதற்கு முன்னர் நிலத்தடி நீர்மட்டம் குறைவது பூமியின் சுழற்சியை மாற்றுவதாக 2016ம் ஆண்டு ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
ஆனால், இதுவரை இந்த சுழற்சி மாற்றங்களுக்கு நிலத்தடி நீரின் குறிப்பிட்ட பங்களிப்பு குறித்து எந்த ஒரு ஆராய்ச்சியும் தீவிரமாக முன்னெடுக்கப்படவில்லை.
1993 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில், மேற்கு வட அமெரிக்கா மற்றும் வடமேற்கு இந்தியா ஆகிய நாடுகளில், மத்திய அட்சரேகைகளில் அதிகளவு நீர் மறுபகிர்வு செய்யப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் மற்றுமொரு உண்மையை தெரிவித்தனர்.
இந்த எல்லை மீரிய நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதன் விளைவாக பூமியின் சுழற்சி பெரிதும் மாறியுள்ளதாகவும் இதன் மூலம் பூமியின் பல்வேறு பகுதியில் காலநிலையில் பெரிய பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாக் ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.
ஆனால் இதற்கு நிலத்தடி நீர்மட்டம் குறைவு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்த முழுமையான தரவுகள் இதுவரை இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே, நிலத்தடி நீர்மட்டம் குறைவதை முற்றிலும் தடுப்பதற்காக பல்வேறு உலக நாடுகள் பல திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் பூமியின் சுழற்சி மாற்றத்தை மீண்டு மாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பூமியின் சுழற்சி துருவமானது பொதுவாக ஒரு வருடத்திற்குள் பல மீட்டர்கள் மாறுவதால் நிலத்தடி நீர் எடுப்பதன் காரணமாக ஏற்படுகின்ற மாற்றங்கள் பருவங்களை மாற்றுவதற்கான எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks