தலைவரின் அதிகாரத்திற்குட்பட்டது என்கிறார் தகவல் தொடர்புத் தலைவர் தினாலன்
கோலாலம்பூர், ஜூன் 14 -
மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியிலிருந்து அதன் மத்தியச் செயற்குழு உறுப்பினர் ச.சிவராஜ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே 11ஆம் தேதி முதல் மேலவை உறுபினருமான அவருடைய நீக்கம் நடைமுறைக்கு வந்ததாக கட்சியின் தகவல் கூறியுள்ளது.
இது குறித்து ஒலியும் ஓளியும் ஊடகம் அவரைத் தொடர்பு கொண்டபோது இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
" காரணம் எதுவும் (பதவி நீக்கம்) கட்சி கூறவில்லை, ஒருவேளை அவர்களுக்கு சிறந்த நபர் கிடைத்திருக்கலாம்," என்று ரத்தினச்சுருக்கமாகக் கூறினார்.
இதனிடையே, சிவராஜ் மத்தியச் செயலவை குழுவிலிருந்து நீக்கப்பட்டதற்கு கட்சி எந்த ஒரு காரணமும் கொடுக்க வேண்டியதில்லை என்று அக்கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் ரா.தினாலன் பதிலளித்தார்.
2021 ஆண்டு சிவராஜ் மத்திய செயலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டபோது அது குறித்து காரணம் தரப்படவில்லை ஏனென்றால் அது கட்சி தலைரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும்.
"ஆகவே, இப்போது அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் இதே தலைவரின் அதிகாரத்திற்குப் உட்பட்டதாகும், இதற்கு அதிகாரப்பூர்வ விளக்கங்கள் அல்லது காரணமோ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை," என்று தினாலன் கூறினார்.
மேலும் இதே வழக்கம் தேசிய முன்னணியிலுள்ள அம்னோவிலும் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
கட்சியின் சட்டம் அதன் தலைவருக்கு அவ்வதிகாரத்தை வழங்குகிறது என்று அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks