அம்னோவின் தலைவிதி முடிவானது நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால் அல்ல


கோலாலம்பூர், ஜூன் 12 - 
மலாக்கா ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அன்றைய புத்ராஜெயா மத்திய அரசாங்கம் உடனே மக்களவையைக் கலைத்திருந்தால் அம்னோ இன்று இவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்காது என்று உச்சநிலை செயற்குழு உறுப்பினர் அகமட் மஸ்லான் குற்றஞ்சாட்டினார்.

ஆனால் அகமட் மஸ்லானின் இந்த உண்மையற்றக் கூற்றினால்தான் தேசிய முன்னணி கடந்த 15வது பொதுத் தேர்தலில் வெறும் 30 நாடாளுமன்றங்களை மற்றுமே வென்று வரலாறு காணாத படு தோல்வி அடைந்ததை என்று முன்னாள் பிரதமர் இஸ்மயில் சப்ரி யாகூப் சாடினார்.

இப்போதைய அம்னோவின் கணிப்பின் வழி தேசிய முன்னணி 112 தொகுதிகளை வென்று தனி ஆட்சியை அமைத்திருக்க முடியும்.

ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால் அக்கணிப்பு நடத்துவதற்கு முன் வாக்காளர்களின் உணர்வு குறித்து சரியான முழுமையான ஆய்வு நடத்தப்பட்டதா என்பதுதான்.

இதன் காரணமாகத்தான் மக்களவையில் தேசிய முன்னணி வெறும் 30 தொகுதிளையே கொண்டுள்ளது என்றார்.

அந்த தருணத்தில் பிரதமராக இருந்த எனக்கு தேசிய முன்னணி அரசாங்கம் அமைக்கும் அளவுக்கு பெரிய வெற்றி பெறாது எனும் அறிக்கை எனக்குக் கிடைத்தது.

அப்போதைய சூழலில் கோவிட்-19 காரணமாக நாட்டின் பொருளாதாரம் நிவாரணம் அடைந்து வரும் காலக்கட்டத்தில் இருந்தது.  

மக்களையும் பொருளாதரத்தையும் மீட்டெடுக்கும் முயற்சி பலனளிக்கத் தொடங்கியது. அந்த சான்றாக 2022ஆம் ஆண்டு பொருளாதாரம் 8.7 விழுக்காடு வளர்ச்சியடைந்தது.

இது தெற்கிழக்காசியாவிலேயே ஏன் உலகிலேயே மறுமலச்சி அடைவு நிலையில் சிறந்த ஒன்று என்று மலேசியாவுக்கு பாராட்டு குவிந்தது என்றார்.

இருப்பினும் நாடாளுமன்றத்தை உடனே கலைக்கும்படி ஏற்பட்ட வற்புறுத்தல் மற்றும் அழுத்தம் காரணமாக இம்முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் போனது என்று வருத்தத்துடன் கூறினார்.

ஆதாரம் இன்றி எளிதில் வெல்லலாம் எனும் மெத்தனப்போக்குடன் இருந்த தேசிய  முன்னணி பொதுத் தேர்தலில் மண்ணைக் கவ்வியது வேதனையளித்தது என்றார்.

மாநில தேர்தலின் முடிவை வைத்து பொதுத் தேர்தலில் தேமுவின் வெற்றியை நாம் நிர்ணயிக்க முடியாது. அது முற்றிலும் தவறு காரணம் இன்றைய அரசியல் சூழல் மிகவுக் வித்தியாசமானது.

மேலும் அன்றைய சூழலில் தேமு மீது மக்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்பதே உண்மை. இதுவே தேமுவின் படுதோல்விக்கு வித்திட்டது என்று மேலும் கூறினார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement