ஜோகூர் பாரு தொகுதி மசீச தலைவர் பதவியைத் துறந்தார் வீ கா சியோங்


கோலாலம்பூர், ஜூன் 11 - 
மசீச தலைவர் வீ கா சியோங் தன்னுடைய ஜோகூர் பாரு தொகுதி மசீச தலைவர் பதவியைத் துறந்தார்.

இம்முடிவின் மூலம் அவர் எதிர்வரும் அக்கட்சியின் தேர்தலில் அப்பதவியை தற்காத்துக்கொள்ளப் போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் தலைவரிடம் தமது பொறுப்பை விட்டு விட்டதாக அவர் மேலும் கூறினார்.

கட்சியிலுள்ள இளைய தலைமுறையினருக்கு வழிவிடும் நோக்கத்திற்காக தாம் அம்முடிவை எடுத்துள்ளதாக இன்று தமது முகநூல் அகப்பக்கத்தில் ஓர் பதிவின் மூலம் உறுதிப்படுத்தினார்.

அவர் ஜொகூர் பாரு தொகுதித் தலைவராக பொறுப்பு வகித்த நாள் தொடங்கி இன்று கட்டியின் தேசியத் தலைவராகப் பொறுபேற்றுள்ளது வரை தமது திருமணம்,அங்கீகரிக்கப்பட்ட பொறியியலாளராக நியமிக்கப்பட்டது உட்பட வாழ்வில் பல ருசீகர நிகழ்வுகளைக் கடந்து வந்ததாக அப்பதிவில் பகிர்ந்துள்ளார்.

ஜோகூர் பாரு தொகுதி மசீச தலைவர் பதவியை தாம் அலங்கரித்த காலங்களில் என்னுடன் அழகான பயணத்தை மேற்கொண்டு அதிக ஒத்துழைப்பு நல்கிய அனைத்து சகாக்களுக்கும் இளைஞர் மகளிர் தொகுதி செயற்குழுவினருக்கும் இருகரம் கூப்பி நன்றி கூறிக்கொண்டார்.

இனி வரும் காலங்களில் இளைய தலைமுறையினர் ஜோகூர் பாரு தொகுதியினை சிறப்பாக வழிநடத்தி கட்சி மற்றும் சமுதாய மேம்பாட்டிற்கு பங்காற்றட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement