தன் தந்தையின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் இளைஞர் ரிஷிக்காக நான் ஒப்புக் கொண்டேன் - தேவா பெருமிதம்

கோலாலம்பூர், ஜுன் 2 -  
மக்கள் ஆதரவின்றி எங்களுக்கு புகழ் இல்லை ரசிகர்களின் கை தட்டலால் தான் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் எங்கள் கதவைத் தட்டுவார்கள்.

மலேசியாவுக்கு நான் ஏன் வந்தேன் என்றால் எனது பிள்ளைகளுக்காக அதாவது ரிசி மற்றும் சிட்டி புரோடக்‌ஷன்ஸ்.

கோரணி நச்சு பரவுவதற்கு முன்பே தம்பி ரிஷி என்னை அழைத்து, அப்பா நீங்கள் மலேசியாவுக்கு வந்து ஒரு கலை நிகழ்ச்சியைப் படைக்க வேண்டும். என் தந்தை உங்கள் அபிமான ரசிகர், உங்கள் பாடல்கள் அனைத்தும் அவருக்கு அலாதி விருப்பம் என்று கேட்டுக் கொண்டார்.

இப்படி அப்பாவுக்காக கலை நிகழ்ச்சியைப் படைக்க என்னைக் கேட்கும் ரிசி போன்ற உன்னத இளைஞன் கேட்கும் போது நான் மிகவும் மனம் நெகிழ்ந்தேன், சற்றும் யோசிக்காமல் ஒப்புக் கொண்டேன்.

புயல்வேகத்தில், ரிஷி ஏற்பாட்டுக் குழுவினர் எறும்பு போல சுறுசுறுப்புடன் செயல்பட்டு இப்படி ஓர் இசை விழாவை என்னை அழைத்து ஏற்பாடு செய்திருப்பது மிகுந்த வியப்பை அளிக்கிறது. 

ஒரு சின்னக் காணோட்டத்தை அவர்கள் தயாரித்து வெளியிட்டு அனைத்து ஊடகவியலாளர்களை வரவழைத்து மனம் விட்டு பேசினோம்.

ஹரிஹரன், அனுராதா ஶ்ரீராம் எஸ்.பி.பி சரன், உன்னிகிரிஷ்ணன், அல்கா பிரியங்கா, சதிஷ் ஆகியோர் என்னுடன் இணைந்து மலேசிய மக்களை மகிழ்விக்க வருகின்றனர்.

குத்து பாட்டு, கானா பாடல், மீனம்மா இப்படி என்ன பாடல் வெண்டுமோ, ஒரு பாடல் பட்டியலையே ரிசி என்னிடம் அனுப்பிவிட்டார்.

மலேசிய மக்கள்  என்ன விரும்புகிறார்களோ அதையும் அனுப்புங்கள் ரிஷி,  அதையும் நாங்கள் பயிற்சி எடுத்து மேடையில் பாடுகிறோம் என்று  நான் ரிஷியிடன்  கூறினேன்.

மலேசிய மக்களை மகிழ்ச்சி படுத்துவதற்காகவே நாங்கள் வருகிறோம், அதைவிட எங்களுக்கு வேறு எதுவும் இல்லை. அவர்களின் கைதட்டல்கள்தான் எங்களை உயர்த்துகிறது.

அவர்கள் நிகழ்ச்சியை  ரசிக்கும் வரை நாங்கள் பாட விருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் நீங்கள் சினிமாவில் பார்த்த அதிசயங்களை நாங்கள் நேரில் மேடையில் காட்ட விருக்கிறோம்.

அண்ணாமலை, சுப்பர் ஸ்டார் பாட்சா ரஜினி நடந்து வரும் காலணி சத்தத்தோடு ஒரு கோரஸ் குழுவுடன் உங்களுக்கு மேடையில் நாங்கள் காட்டவிருக்கிறோம். மேலும்  குஷி, அஜித்தின் சிட்டிசனா, கமலின் அவ்வை சண்முகி,  இவை அனைத்தையும் இசை மூலம் ரசிகர்களுக்கு மேடையில் படைப்போம்.

அதுமட்டுமின்றி  நாங்கள் எப்படி இசையை ரெக்கார்டிங் செய்தோம் என்பதை நேரடியாக மேடையில் காட்டவிருக்கிறோம் என்ற சுவாரஸ்யமான தகவலை ஒலியும்  ஒளியும் ஊடகத்திடம் பகிர்ந்து கொண்டார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement