கோலாலம்பூர், ஜூன் 8 -
கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நோருக்கு மீது மேற்கொள்ளப்படும் காவல் துறை விசாரணை மிகவும் அபத்தமானது என்று பாஸ் கட்சி தமது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.
மேலும்,பினாங்கு கெடாவிற்குச் சொந்தமானது எனும் சர்ச்சைக்குறிய அறிக்கையை வெளியிட்ட சனூசியின் மீதுள்ள காவல் துறை விசாரணை நம்பிக்கை கூட்டணி - தேசிய முன்னணி ஒருமைப்பாடு அரசாங்கத்தின் அரசியல் நடவடிக்கை என்று கடுமையாகச் சாடியுள்ளது.
சனூசியின் அறிக்கை வரலாற்று உண்மையைச் சார்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையாகும்.
இதற்காக அவர் மீது காவல் துறை விசாரணை பாய்வது நாட்டின் ஜனநாயக வரலாற்றில் விழுந்த ஒரு கருப்பு அத்தியாயம் என்று அக்கட்சியின் மத்திய தகவல் தொட்ர்புத் தலைவரும் ஜெராந்துட் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரில் நிஜாம் கைருடின் குறிப்பிட்டுள்ளார்.
என்னதான் சனூசிக்கு எதிராக தொடங்கப்பட்ட விசாரணை காவல் துறையின் கடமையானாலும், அவர் எகழுப்பிய விஷயத்தால் நம்பிக்கைக் கூட்டணி-தேசிய முன்னணி அஞ்சி நடுங்க ஆரம்பித்துள்ளதாக கூறினார்
சனூசியின் அறிக்கை ஏராளமானோர் கூறுவது போல அல்லா விவகாரத்தைப் போல நாட்டின் அமைதியை சீர்குழைக்கவில்லை
ஆகவே இந்த விசாரணையில் காவல் துறை நடுநிலையாகவும் நேர்மையுடனும் நடந்துகொள்வர் என்றும் அவர்கள் வரலாற்று உண்மையைப் புரட்டிப் பார்க்கவேண்டியது அவசியம் என்றார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks