பினாங்கைச் சொந்தம் கொண்டாடும் சனூசிக்கு வரலாறு புரிதல் இல்லை: துணைப் பிரதமர் ஜஹிட் ஹமிடி காட்டம்!



கோலாலம்பூர், ஜுன் 1 - 
பினாங்கு மாநிலம் கெடாவிற்குச் சொந்தமானது என்று சொந்தம் கொண்டாடி  பொது இடங்களில் அறிக்கை விடும் மந்திரி புசார் முகமட் சனூசியின் செயல் கிளர்ச்சி வன்மையைத் தூண்டும் நோக்கமாகும்.

சனூசியின்  அச்செயலானது, அவர் சரியன வரலாறு, அரசியலமைப்புச் சட்டம் பற்றிய புரிதல் கொண்டிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது என்று துணைப் பிரதமர் அகமட் ஜாஹிட் ஹமிடி காட்டமாகத் தெரிவித்தார்.

நாட்டின் வரலாறு பற்றி பாண்டித்தியம் பெற்றவர்கள் கெடா பினாங்கு  உரிமை குறித்த விவகாரத்தை விவாதிக்க மாட்டார்கள்.

சனூசியின் இந்த போக்கு வன்முறை, கிளர்ச்சியைத் தூண்டக்கூடிய அபாயம் உள்ளது என்று அந்த அம்னோ தலைவர் நினைவூட்டினார்.

புதன்கிழமையன்று தலைநகரிலுள்ள டேவான் பாஹாசா புஸ்தாக்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் ஊடக்கவியலாளர்களிடம்  மேற்கண்டவாறு கூறினார்.

கெடாவிற்கும் பினாங்குக்கும் எந்த ஒரு எல்லையும் கிடையாது காரணம், பினாங்கு இன்னும் கெடாவிற்குச் சொந்தமானது. மேலும் கெடா  பெர்லிசுடனும்  பேராக்குடனும்தான் எல்லையைக் கொண்டிருக்கின்றது என்று கடந்த திங்களன்று  சனூசி கூறியதாக மேற்கோள் காட்டி இணைய ஊடகம்  செய்தி வெளியிட்டிருந்தது.

தொடர்ந்து கருத்துரைத்த அந்த பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினர், கெடா பினாங்கு மாநிலங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் பின் அடங்கியுள்ள  சட்டத்தையும்  அரசியலமைப்புச் சட்டத்தையும் நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.

அவற்றில் உள்ள சில ஒப்பந்தங்கள் ஆங்கிலேயர் காலணித்துவ காலத்தில் கையெழுத்தானது என்பதை நினைவில் கொள்ள வேண்டியது மிக முக்கியம் என்றார்.

நாம் காலணித்துவத்தை எதிர்த்தோம் ஆனால் மலாயா உருவாகுவதற்காக அந்த இரு மாநிலங்களுக்கிடையிலான ஒப்பந்தம் கோப்போல்ட் ஆணையமாக வடிவானது என்றார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement