கள்ளத்தொடர்பு சந்தேகத்தால் ஏற்கனவே திருமணமான காதலிக்கு 18 கத்திக்குத்து, கழுத்தறுத்துக் கொலை

ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற காதலன் கைது


பெட்டாலிங் ஜெயா, ஜூன் 10 - 
வாழ்க்கையில் உறவுகளில் சந்தேகம் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விபரீதம்  எவ்வளவு கொடுமையானது என்பது தகுந்த உதாரணம் இதோ!

உயிருக்குயிரான காதலி மற்றொரு ஆடவனுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறாள் என்று சந்தேகித்து சிறிதும் விசாரிக்காமல் அவளை காய்கறி வெட்டும் கத்தியால் நெஞ்சில் 18 முறை சரமாரியாக தாக்கி பிறகு கழுத்தை அறுத்து  கொடூரமாகக் கொலை செய்தான் அவள் காதலன்.

பிறகு ரத்த வெள்ளத்தில் அவளது உடலை உறங்கும் அறையிலேயே விட்டுவிட்டு அவ்வாடவன் தமது உயிரை மாய்த்துக் கொள்வதற்காக ரயில் தண்டவாளத்தில்  படுத்துவிட்டான்.

ஆனால், துரதஷ்டவசமாக எதிரே உள்ள அடுத்த தண்டவாளத்தில் ரயில் கடந்து சென்றதால் மனமுடைந்த அவ்வாடவன் அங்கு ரயில் நிலைய காவலாளிகள் வருவதைக் கண்டு ஓட்டம் எடுக்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டான்.

பிறகு , காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, இரயில் நிலையத்தில் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டபோது, தமது காதலியைக் கொடூரமாக கொலை செய்த செயல் அம்பலமானது.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் தலையகத்தின் தலைவர் உதவி ஆணையர் முகமட் பக்ருடின் அப்துல் அமிட் கூறுகையில், இந்த கொரச் சம்பவம் கடந்த ஜூன் 2ஆம் தேதியன்று கிளானா ஜெயாவிலுள்ள ஓர் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்ததாக உறுதிபடுத்தினார்.

கடந்த ஜூன் 3ஆம் தேதி மாலை சுமார் 4.50 மணிக்கு தலைநகரிலுள்ள சாலாக் செலாத்தான் இஆரெல் எனும் மின்னியல் ரயில் நிலையத்தில் அத்துமீறி நுழைந்த சம்பந்தப்பட்ட 30 வயதுமிக்க அந்நிய ஆடவனைக் கைது செய்து விசாரணைக்காக செராஸ் மாவட்ட காவல் குற்றவியல் துறையிடம்  ஒப்படைத்தனர் என்றார்.

ஆனால், விசாரணையின் போது காவல் அதிகாரியிடம் அவ்வாடவன் தாம் தற்கொலைக்காக தண்டவாளத்தில் படுத்ததாகக் கூறி அதிர்ச்சியில் ஆழ்த்தினான்.

மேலும், தற்கொலைக்கான காரணத்தை வினவியபோது, அவன் தமது 40 வயதுடைய காதலியைக் கத்தியால் சாகும் வரை சரமாரியாகக் குத்தி கழுத்தறுத்து கொலை செய்ததாக எந்த ஒரு பதற்றமும் இன்றி கூறியது கேட்டு  அதிகாரிகள் அதிர்ந்தனர்.

"உடனே  செராஸ் குற்றவியல் பிரிவு அதிகாரிகளும் தவல் பெற்ற பெட்டாலிங் ஜெயா மாவட்ட குற்றவியல் பிரிவு அதிகாரிகளும் அந்த ஆடவனின் வாக்குமூலத்தின் தகவலுடன் அன்றிரவு சுமார் 11.10 மணியளவில் அவன் தங்கியிரந்த  ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பிற்கு விரைந்தனர்.

"ஆங்கே சோதனையிட்ட காவல் படையினர் ஒரு பெண் உட்பட ஏழு அந்நியர்களும் ஒரு உள்நாட்டவரும் வாடகைக்கு தங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

"பிறகு, கைதான ஆடவன் அதிகாரிகளை தான் தங்கியிருந்தனி அறைக்குள் அழைத்துச் சென்றபோது அங்கே அவன் கொலை செய்த காதலி ரத்த வெள்ளத்தில்  தரையில்  உயிரற்று இருந்தாள்," என்று மேலும் கூறினார்.

சம்பவம் நடந்த அதே அறையில் காவல் துறையினர் கொலையாளி பயன்படுத்திய கத்தியையும் கைப்பற்றினர் என்றார்.

உடனே, அவ்விட்டில் கைதான ஆடவனுடன் தங்கியிருந்த அவ்வனைத்து 7 பேரையும் கைது செய்து அனைவரையும் எதிர்வரும் ஜூன் 14 வரை தொடர் விசாரணைக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக முகமட் பக்ருடின் உறுதிடுப்படுத்தினார்.

கொலை செய்த ஆடவன் உட்பட அவர்கள் 8 பேரும் மரண தண்டனையை  வழங்க வகைச் செய்யும் தண்டனைச் சட்டம் 302 உட்பிரிவின் கீழ் அவர்கள் அணைவரும் விசாரிக்கப்படுவதாக  முகமட் பக்ருடின் கூறினார்.

இங்குள்ள பெட்டாலிங் ஜெயா காவல் தலைமையகத்தில் இச்சம்பவம் தொடர்பாக ஏற்பாடு செய்த சிறப்பு பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட்டத்தில் இந்த செய்தியை அம்பலப்படுத்தினார்.

சந்தேகிக்கப்படும் அவ்வாடவனிடம் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில், அந்த ஆடவனும், கொலையுண்ட அவன் காதலியும் இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

மேலும், கொலை செய்யப்பட்ட பெண் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாய் என்றும், தற்போது அவள் கணவனும் பிள்ளையும் பஞ்சாப்பில் வசிப்பது அம்பலமாகியுள்ளது.

இதற்கிடையில், சமூக பயண விசாவில் கடந்த மூன்று மாதத்திற்கு முன் மலேசியா வந்தடைந்த இவ்விருவரும் இங்கே காதலிக்கும் ஜோடிகளாக வாழ்ந்துள்ளனர்.

"இருப்பினும், தமது காதலி அவர்கள் வீட்டில் தங்கியுள்ள சக நாட்டைச் சேர்ந்த இன்னொரு ஆடவனுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளாள் என்று சந்தேகப்பட்டுள்ளான்.

"உயிருக்கு உயிராக காதலித்து உண்மையாக இருந்த தம்மை ஏமாற்றிவிட்டதாக மனமுடைந்து ஆத்திரமடைந்த இந்த ஆடவன் (காதலன்), அப்பெண்ணை கத்தியால் 18 முறை உடம்பில் கொடூரமாகத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், அவளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான்.

"இந்த கொலைச் சம்பவம் ஜூன் 2ஆம் தேதி பிற்பகல் 4 முதல் 6 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அரங்கேறியுள்ளது," என்று  அவர் மேலும் கூறினார்.

"உடனே ஒருநாள் முழுவதும் செய்வதறியாது விழித்த சந்தேகத்துக்குறிய ஆடவன் ஆழ்ந்த சிந்தனையுடன் பொது வீதியில் நடந்து சென்றபோது உடனே காதலி இல்லாமல் வாழ்ந்து பயனில்லை என்ற முடிவெடுத்து அருகேயுள்ள  இஆர்எல் சாலாக் செலாத்தான் விவேக ரயில் நிலையத்தில் அத்துமீறி நுழைந்து தற்கொலைக்காக தண்டவாளத்தில் படுத்துவிட்டான்.

"ஆயினும், ஆடவனின் அத்துமீறலை உணர்ந்த அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அங்கிருந்து ஓட முயன்ற அந்த ஆடவனை வளைத்துப் பிடித்தனர்.

மேலும், அவனை சோதனை செய்தபோது, அவனது காலணிக்குள் சிறு  காகிதமொன்றை கண்டெடுத்தனர். அதில் "நான் என் காதலியைக் கொலை செய்து விட்டேன், ஆகவே நானும் தற்கொலை செய்துகொள்கிறேன்" என்று குறிப்பு எழுதப்பட்டிருந்தது  கைப்பற்றப்பட்டதாக உறுதிப்படுத்தினார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement