ரசாருடின் ஹுசேன் இன்று அதிகாரப்பூர்வமாக 14ஆவது காவல் படைத் தலைவர் பணியைத் தொடங்கினார்

ரசாருடின் ஹுசேன் இன்று காலை தமது புக்கிட் அமான் தலைமையகத்தில் முதல் நாள் பணியைத் தொடங்கினார்.

கோலாலம்பூர், ஜூன் 23 - 
நாட்டின் 14ஆவது  தேசிய காவல் படைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட  ரசாருடின் ஹுசேன் இன்று காலை அதிகாரப்பூர்வமாக தமது பணியைத் தொடங்கினார்.

இன்று காலை 8 மணிக்கு காவல் படைத் தலைவருக்கான அதிகாரப்பூர்வ வாகனம் ரசாருடினை புக்கிட் அமான் காவல் படை தலைமை அலுவலகத்திற்கு ஏற்றி வந்தது.

ரசாருடினை காவல் படையின் செயலாளர் துணை ஆணையர் நூர்சியா முகமட் சாடுடின் மெனாரா ஒன்றில் வரவேற்று வீர வணக்கம் செலுத்தினார்.

பிறகு அங்கே அவர் அதிகாரப்பூர்வமாக முதல் நாள் பணியைத் தொடங்கும்  அடையாளமாக பதிவு புத்தகத்தில் கையெழுத்திட்டார்.


பிறகு, காவல் படைத் தலைவராக பொறுப்பேற்றதற்காக சிறப்புப் பிரார்த்தனை அல்லது  இஸ்லாமிய முறையில் துவா வாசிக்கப்பட்டது. 

இதற்கு முன் கடந்த ஆண்டு இறுதியில் தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட  ரசாருடின் கடந்த 16 மார்ச் மாதம் கட்டாயம் பணி ஓய்வு பெறவேண்டியிருந்தது.

இருப்பினும், அவரின் பதவிக் காலம் இன்னும் இராண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கடந்த செவ்வாயன்று இஸ்தானா நெகாராவில் மாட்சிமை தங்கிய மாமன்னரை சந்தித்து சைபுடின் ரசாருடினை 14ஆவது காவல் படை தலைவராக முன்மொழிந்தார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement