ஈபிஎப் சிறப்புப் பணப் பட்டுவாடா அனுமதிக்க முடியாது! - பிரதமர் திட்டவட்டம்


ஷாஆலம், மே 9 - 
ஊழியர் சேமநிதி வாரிய சேமிப்பிலிருந்து பணத்தை சிறப்பு பட்டுவாடா செய்யும் அனுமதியை மறுக்கும் முடிவிலிருந்து பிரதமர் இன்றுவரை ஒரு போதும் பின்வாங்காமல் உறுதியுடன் உள்ளார்.

இந்த ஊழியர் சேமநிதி வாரிய விவகாரம் விரையில் ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலின்போது எதிர்கட்சியின் தேர்தல் பிரசாரமாக விஸ்வரூபம் எடுத்தாலும் சேமிப்பாளர்களின் அந்நிதியை அவர்களின் நன்மைக்காக பாதுகாக்க வேண்டிய கடப்பாடு என்றும் அதுதான் தம்முடைய தலையாயக் கடமையாகும் என்று அன்வார் இப்ராஹிம் சூளுரைத்தார்.

"ஊழியர் சேமநிதியிலுள்ள பணத்தை எடுப்பதற்காக அரசியல் ரீதியில் பல அலுத்தங்களை எதிர்நோக்கினாலும், நான் இவ்விவகாரத்தில் அனுமதி அளிக்கவில்லை காரணம் தங்களின் எதிர்கால நலன் கருதி அவர்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர்.

"ஆயினும், இதற்கு முன்னர் நாட்டில் பரவிய கோறணி தொற்று நோயால் நான்கு முறை குறிப்பிட்ட தொகை அவர்களின் சேமிப்பிலிருந்து எடுக்க அனுமதி வழங்கப்பட்டது," என்று குவாசா டாமான்சாரவிலுள்ள ஈபிஎப் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement