யாருக்கு அதிக மக்கள் செல்வாக்கு என்பதை தேர்தல் முடிவில் நிரூபிப்போம் வா!

முகைதீனுக்கு நேரடி சவால் விடும் ஜாஹிட் ஹமிடி!


கோலாலாம்பூர், மே 21 - 
வெற்றி பெற வாழ்த்துகள் முகைதீன்! நீ சொல்வது போல யாருக்கு அதிக மக்கள் செல்வாக்கு இருப்பதென்பதை எதிர்வரும் மாநிலப் பொதுத் தேர்தலில்  நிரூபிக்கலாம் வாருங்கள்!

ஆறு மாநிலங்களில் விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில்  அதிகபட்சம் 80 விழுக்காடு வாக்காளர் ஆதரவைப் பெறுவதில் தேசியக் கூட்டணிக் கட்சிக்கு வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருப்பதாக நம்பிக்கைக் கொண்டிருக்கும் அதன் தலைவர் முகைதீன் யாசினுக்கு எதிராக தேசிய முன்னணியின் தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று நேரடி சவால் விட்டுள்ளார்.

பெரிக்காத்தான் கூட்டணி மேற்கொண்ட ஆய்வின் வழி இதர பிரதான அரசியல் கட்சிகளைக் காட்டிலும், பெர்சத்து, பாஸ், கெராக்கான் அகிய கட்சிகளை உள்ளடக்கிய பெரிக்காத்தான் நெஷனல் தலைமைத்துவத்திலும் செல்வாக்கின் அடிப்படையிலும் முன்னணி வகிப்பதாக கூறிக்கொள்கிறது.

இந்த கூற்றிற்கு பதிலளித்த துணைப் பிரதமருமான அவர், பாகோ  நாடாளுமன்ற உறுப்பினருமான அவருக்கு தேர்தல் களத்தில் நிரூபிக்கும்படி சவால் விடுத்தார்.

"முகைதீனுக்கும் அவரது கூட்டணிக்கும் மாநிலத் தேர்தலைச் சந்திக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

"நாம் இருவருமே தேர்தலில் போட்டியிட்டு அதன் முடிவின் மூலம் யாருக்கு அதிக வாக்காளர்களின் செல்வாக்கும் ஆதரவும் உள்ளது என்பதை  நிரூபித்துக் காட்டுவோம் வா!" என்று சவால் விடுத்தார்.

இரவு நடைபெற்ற மலேசிய பஞ்சாபி கட்சியின் வைசாக்கி திருநாள் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்தப்பின் மேற்கண்டவாறு  கூறினார்.

பஞ்சாபி கட்சியி தலைவர் டத்தோ குர்ஜிட் சிங் ரண்டே ஏற்பாட்டில் நடைபெற்ற அவ்விருந்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட சீக்கிய சமூகத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி மற்றொரு நிலவரத்தில், தொகுதி பகிர்ந்தளிப்பு விவகாரம் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த இறுதி முடிவை  தேசிய முன்னணி அறிவிக்கும் என்றார்.

மேலும், தேசிய முன்னணிக் கட்சி உச்சநிலை செயற்குழு எதிர்வரும் மாநில பொதுத் தெர்தலில் தனது தராசு சின்னத்திலேயே போட்டியிடும் என்று மறு உறுதிப்படுத்தினார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement