ஒருமைப்பாடு அரசாங்கத்தில் இணைய பாசை ஜசெக அழைத்தது! - இல்லை என்று மறுக்கும் அம்னோ தலைவர் பொய்யுரைக்கிறார்!



கோலாலம்பூர்,மே 30 - 
ஒருமைப்பாடு அரசாங்கத்தில் இணைய அழைப்பு வந்தது என்று கூறும் எதிர்கட்சியான பாஸ்சின் கூற்று முற்றிலும் உண்மை என்று அக்கட்சியின் மத்திய  தகவல் தொடர்புத் தலைவர் கைரில் நிஜாம் கைருடின் உறுதிப்படுத்தினார்.

இன்று டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையின் வழி, பாஸ் கட்சியின்  கூற்றினை மறுத்து , ஒருமைப்பாடு அரசாங்கத்தில்  இணைவதற்கு பகல் கனவு காண வேண்டாம் என்று பகிரங்கமாகச் சாடிவரும் அம்னோ தலைவர்  அகமட் ஜாஹிட் ஹமிடி பொய்யுரைக்கிறார் என்று கைரில் கடுமையாகச் சாடினார்.

பிரதமர் அன்வார் இபுராகிமின் ஒருமைப்பாடு அரசாங்கத்தில் இணைவதற்கு பாஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது முற்றிலும் உண்மையாகும்.

"உண்மையில், ஜசெக கட்சியின்  ஆலோசகரான முன்னால் கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங் அந்த அழைப்பை விடுத்தார்.

"அன்வாரின் அரசாங்கத்தில் உறுப்பியம் பெற்றுள்ள அம்னோ மலாய் சமூகத்தின் ஆதரவையும்  நம்பிக்கையையும் பெறத் தவறியதாலும், தற்போதுள்ள அரசாங்கம் மிகவும் இக்கட்டான சூழலில் இருப்பதாலும், பாஸ் அன்வாரின் அரசாங்கத்தில் இணைவது மிக சிறந்தது என்று லிம் கூறியுள்ளார்.

ஆகவே, இந்த விவகாரத்தை மறைத்து  துணைப் பிரதமர் ஜாஹிட்  பொய்யான கூற்றைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் மேலும் கூறினார்.

மேலும், பாகான் டத்தோ நாடளுமன்ற உறுப்பினருமான ஜாஹிட், தொடர்ந்து  நாட்டு மக்களையும், அம்னோ உறுப்பினர்களையும் ஏமாற்ற வேண்டாம்.

இதற்கு முன்னர் அம்னோ  ஜசெக, அன்வாருக்கு ஆதரவு தராது என்ற நிலைப்பாட்டுடன் இருந்த தேசிய முன்னணி
மூத்த பங்காளிக் கட்சி இப்போது அடிமட்ட அம்னோ உறுப்பினரால் வெறுக்கப்படும் இவ்விரு கட்சியுடனும் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிப்பது வெட்கத்துக்குறிய செயலாகும்.

இருப்பினும், பெரிக்காத்தான் நெஷனல்  தொடர்ந்து தனது  நடவடிக்கைகளை முடக்கி விட்டு  மக்களின் மிரச்சனைகளை கேட்டு அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபடும்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement