கோலாலம்பூர், மே 31 -
2020ஆம் ஆண்டில் நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி வீழ்ந்ததற்கு ஜசெக-வைக் காரணம் கூறும் பெர்சத்து துணைத் தலைவர் பைசால் அசுமூவின் அறிக்கை அறிவுக்கு எட்டாததாகும்.
மேலும், ஜசெக மட்டுமே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கும் அந்த முன்னாள் தம்பூன் நாடளுமன்ற உறுப்பினர் அரசியல் முதிர்ச்சியை இழந்துள்ளதைத் தெளிவாகக் காட்டுகிறது.
பெர்சத்து செய்த தவறால்தான் பாக்காத்தான் ஹரப்பான் அரசாங்கம் அன்று மிக மோசமான அரசியல் வீழ்ச்சியைச் சந்தித்தது என்று பைசால் முதலில் நன்கு உணர வேண்டும் என்று மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் வி.பவானி நினைவூட்டினார்.
நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தில் அப்போது அங்கத்துவம் வகித்த பெர்சத்து கட்சிதான் 14ஆம் பொதுத் தேர்தலில் மலேசிய மக்கள் வழங்கிய ஆதரவினை மதிக்காமல் நம்ப்பிக்கை துரோகம் செய்து தவறான வழியில் பின்புற அரசாங்கத்தை அமைக்கும் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டது.
ஆனால் இதில் மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால் , அந்த ஷெரத்தோன் நடவடிக்கையில் உடந்தையாக இருந்த முன்னாள் பேராக் மந்திரி புசாருமான பைசால் அதன் விளைவினை அறியாதது போல் பாசங்கு செய்வதுதான் அதிர்ச்சியாக உள்ளது.
அல்லது, பைசால் வேண்டுமென்றே வக்கிர புத்தியுடன் அரசியல் வெறுப்பை உருவாக்கி ஜசெக தான் அனைத்து பிரச்சனைக்கும் மூல காரணம் என்ற அபிப்பிராயத்தை மக்களிடத்தில் விதைப்பதுபோல் உள்ளது என்று பவானி ஒலியும் ஒளியும் ஊடகத்திடம் கூறினார்.
பெர்சத்துவின் அப்போதை அரசியல் சூழ்ச்சி முன்னாள் பிரதமர் துன் மகாதீரை வீழ்த்துவதிலேயே மிகத் தெளிவாக இருந்தது.
"அந்தச் செயல்தான் உண்மை கூற்றாக விளங்கி யார் தப்பான எண்ணமும் பதவி மோகம் கொண்டவர்கள் என்று மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின் ஜனநாயகத்திற்கே எதிரானதாக கருதப்படும் பெர்சத்துவின் அரசியல் விளையாட்டு நம்பிக்கை கூட்டணியிலிருந்த பங்காளிக் கட்சிகளை நம்பிக்கை துரோகம் செய்ததோடு மட்டுமில்லாமல் மக்களை நிலையற்ற அரசாட்சிக்குத் தள்ளி 2 ஆண்டுகளாக அவதிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இப்போது கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் பெர்சத்து கட்சி மக்கள் தலைத்துவத்தைப் பற்றி அக்கரையோடு பேசுவது வேடிக்கையாக உள்ளது.
நாடு அப்போதய சூழலில் கோரனி நச்சு பரவலை எதிர்நோக்கிக் கொண்டிருந்த போது உணவுக் கூடை பற்றி கருத்து கூறிய பைசாலில் நடவடிக்கையை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
அதுமட்டுமல்லாமல், அத்தருணத்தில் பின்புறமாக ஆட்சியமைத்த அரசாங்கத்தின் ஆதரவு எண்ணிக்கை குறித்து பல கேள்விகள் எழுந்தது.
ஆகவே, அகமட் பைசால் அசுமு போன்ற அரசியல் கோமாளி மடானி அரசியலுக்கு ஒரு மோசமான உயிரைக் கொல்லும் ஆபத்தான புற்றுநோயாகும்.
பைசால் அசுமூ பொன்ற அரசியல் முதிர்ச்சியற்ற நபரால் நாட்டிற்கும் மக்களுக்கும் எந்த ஒரு நன்மையும் ஏற்படப் போவதுமில்லை.
பைசால் அசூமுவின் கோமாளி செயல் அன்வார் இபுராகிமின் நிலையான அரசியல் ஆட்சியை சீர்குலைக்குமே தவிர நன்மை பயக்கப்போவதில்லை என்பது உறுதி.
மேலும், மாநிலத் தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதால், அரசியல் பிரச்சனையை உருவாக்குவதற்கும் மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காகவே பைசால் அசுமு இப்படி அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகிறார்.
ஆனால், அவரும் பெர்சத்து கட்சியும் தேசிய அரசியலில் நம்பிக்கை இழந்துவிட்டதை உணரத் தவறிவிட்டது ஆச்சரியமாக உள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks