தலைக்கவசத் திருடன் முக்கிய ஆவணங்கள், ரிம. 6,500 ரொக்கத்துடன் தலைமறைவு
கோலாலம்பூர், மே 21 -
அறுசுவை குளம்பி பெண் கலை நிபுணரிடம் (பரிஸ்த்தா காப்பி எக்ஸ்பிரேசோ) தலைக்கவசம் அணிந்த ஆடவன் ஒருவன் கத்தி முனையில் கொள்ளையடித்துள்ளான்.
இந்தத் திடுக்கிடும் சம்பவம், இங்குள்ள செந்தூல் மாவட்டத்தில் இருக்கும் செந்தூல் உத்தாரா அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு 10 மணிக்கு நிகழ்ந்ததாக மாவட்ட காவல் துறை தலைவர் உதவி ஆணையர் அகமட் சுகார்னோ முகமட் ஜாஹாரி கூறினார்.
நேற்று சனிக்கிழமை பாதிக்கப்பட்ட அப்பெண்ணிடமிருந்து புகார் ஒன்றை காவல் துறை பெற்றதாக அவர் உறுதிப்படுத்தினார்.
"சம்பவத்தின்போது அப்பெண் அந்த அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள தானியங்கி இயந்திரம் (லிப்ட்) மூலம் 5ஆம் மாடியிலுள்ள தமது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
"அப்போது, தன்னுடன் லிப்டில் தலைக்கவசமனிந்த மற்றொரு ஆடவர் நான்காம் மாடியில் வெளியேறியுள்ளான்.
"பிறகு, 5ஆம் மாடியில் வெளியேறிய அப்பெண் தமது வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்ததும், திடீரென நான்காவது மாடியில் வெளியேறிய தலைக்கவசமனிந்த ஆடவன் எதிரே தோன்றி வழிமறைத்து வயிற்றில் கத்தியை வைத்தான்," என்றார்.
அந்த சந்தேகத்துக்குறிய ஆடவன், அப்பெண் வைத்திருந்த கைத்தொலைபேசி, சில முக்கிய ஆவணங்கள், ரிம.6,500 ரொக்கம் அனைத்தையும் அபகரித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து கம்பி நீட்டினான்.
இருப்பினும் அதிர்ஷ்டவசமாக கொள்ளையன் அப்பெண்ணிற்கு எந்த ஒரு காயத்தையும் ஏற்படுத்தவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல் துறை பிரிவு 392/397 பிரிவுகளில் குற்றப்பத்திரிக்கையயை திறந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும்.
மேலும், அந்த உள்நாட்டு ஆடவன் என்று சந்தேகிக்கப்படும் கொள்ளையனை காவல் துறை வலை வீசி தேடி வருகின்றது.
சம்பவத்தின் போது சந்தகிக்கப்படும் அக்கொள்ளையன் கறுப்பு நிற மழை ஆடையை உடுத்தியிருந்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பெறப்பட்ட தகவலிளிருந்து தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks