பங்காளிக் கட்சிகளுக்கு ஆட்சேபனை இல்லையெனில், பஞ்சாபி கட்சியை இணைத்துக் கொள்ள தேமு தயார்

தேமுவின்  அரசியலமைப்பு சட்டத்தை ஒருமனதாக மதிப்பளிக்க வேண்டும்!


கோலாலம்பூர், மே 22 - 
தேசிய முன்னணி கூட்டணியில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கும்  மலேசியப் பஞ்சாபி கட்சியின் விண்ணப்பத்தைப் பரிசீலிப்பதற்கு தேசிய முன்னணி தயாராக இருக்கிறது.

இந்நடவடிக்கையின் மூலம், தேசிய முன்னணி இன்னும் ஒருமைப்பாடுமிக்க, வலுவான ஒரு கட்சியாக எதிர்காலத்தில் அமையும் என்பது தின்னம் என்று அதன் தேசியத் தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி நேற்றிரவு கூறினார்.

ஆயினும், தேமு கூட்டணியில் உள்ள மஇகா உட்பட அனைத்து பங்காளிக் கட்சிகளும் இணக்கம் தெரிவித்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றார்.

காரணம், பங்காளிக் கட்சிகள் சம்மதத்தின் வழி தேமுவின் அரசியலமைப்பு சட்ட வரைவில் திறுத்தம் செய்து பிறகு பஞ்சாபி கட்சி உட்பட தோழமை கட்சிகள் அனைத்தையும் பங்காளிக் கட்சிகளாக இணைத்துக் கொள்ள முடியும்.

"தேசிய முன்னணி தோழமைக் கட்சிகளை சகோதர புத்துணர்வோடு  நடத்துகிறோம் காரணம் அவர்கள் அணைவரும் நிலையான மலேசியாவை உருவாக்குவதற்கு வற்றாத பங்களிப்பை வழங்குவதற்கு ஆர்வமாக இருக்கின்றனர்.

"ஆகவே, என்றாவது ஒரு நாள் கட்சியின் அரசியலமைப்பு சட்டத்தைத் திறுத்துவதற்கு பங்காளிக் கட்சிகள் ஒருமனதுடன் சம்மதித்தால் நிச்சயம் தோழமைக் கட்சிகளை கூட்டணிக் கட்சிகளாக ஏற்றுக் கொண்டு தேமுவை  வலுப்படுத்துவதற்கு தலைமைத்துவம் தயாராக இருக்கிறது.

"மஇகா துணைத் தலைவர் சரவணனும் இங்கு இருக்கிறார், நமது இந்த விருப்பத்தை நிச்சயம் அவர் மஇகாவின் தலைவரிடம் கொண்டு சேர்ப்பார் என்று நான் பெரிதும் நம்புகிறேன்," என்று அவர் மேலும் சொன்னார்.

இங்குள்ள ஜாலான் அம்பாங்கில் அமைந்துள்ள அமான் கிளப்பில் சீக்கிய சமூகத்தின்  வைசாக்கி  விழா கொண்டாட்ட விருந்தில் கலந்து சிறப்பித்த பின் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மலேசிய பஞ்சாபி  கட்சியின் தலைவர் குர்ஜிட் சிங் ரண்டே அவர்களும் வருகை தந்தார். மேலும், துணைப்பிரதமர் ஜாஹிட் குர்ஜிட்டை எதிர்வரும் மாநிலப் பொதுத் தேர்தலில்  போட்டியிட  அழைப்பு விடுத்தார்.

இம்முறை நடக்கவிருக்கும் மாநிலத் தேர்தலில் போட்டியிட குர்ஜிட் விருப்பம் கொண்டுள்ளாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும், விருப்பம் இருந்தால் (தேமுவை பிரதிநிதிக்க) அவர் போட்டியிடுவதற்கான ஏற்றத் தொகுதியை அடையாளம் கண்டு என்னிடம் சொல்ல வேண்டும்.
 
"எதிர்காலத்தில், இந்த மலேசிய பஞ்சாபி கட்சியைப் பிரதிநிதித்து முக்கியப் பிரமுகர்கள் அமைச்சரவையில் அங்கத்துவம் பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்," என்று பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement