நிபோங் திபால், மே 5 -
சமய நிகழ்வு சார்ந்து ஓர் பொய் அறிக்கையை பரப்பிய குற்றச்சாட்டிற்காக முகநூல் உரிமையாளர் டேவிட் மார்ஷல் எனும் நபருக்கு எதிராக தென் செபராங் பிறை மாவட்ட காவல் துறையின் தலைவர் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
சூப்பரின்டென்டன் லே சோங் சென் அவர்கள் டேவிட் எனும் நபருக்கு எதிராக அந்தப் புகாரை புதன்கிழமை இரவு மணி 10.04க்கு அளித்துள்ளார்.
செபராங் பிறை மாநகர் மன்றத்தின் உறுப்பினருமான டேவிட் மார்ஷல் எனும் நபர் தமது முகநூல் அகப்பக்கத்தில் சமயம் சார்ந்த அறிக்கை ஒன்றை பதிவேற்றம் செய்தது தொடர்பாக இந்தப் புகார் அமைந்துள்ளது.
இதன் தொடர்பில் டேவிட் மார்ஷலுக்கு எதிராக செக்ஷன் 500 குற்றவியல் வன்முறைச் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், செக்ஷன் 233 தொலைத்தொடர்பு பல்லூடக சட்டம் 1998 கீழ் விசாரணை தொங்கியிருப்பதாக அவர் நேற்றிரவு வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி மேலும் குறிப்பிட்டார்.
விசாரணைக்கான அனுமதி பெறப்பட்டதும் காவல் துறை தொலைத்தொடர்பு பல்லூடக ஆணையத்திடம் தகவல் சேகரிக்கும் வேலையில் தீவிரமாக காவல் துறை ஈடுபட்டுள்ளதென்று அவர் மேலும் கூறினார்.
இந்த விசாரணை குறித்த மேல் விபரங்கள் பிறகு அறிவிக்கப்படும் என்று லீ சொன்னார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks