பெற்ற மகனை தனது காம இச்சைக்கு பலியாக்கிய தாயின் வெறிச் செயல்!


கோலசிலாங்கூர், மே 5 - 
தனது 14 வயது மகனை வழுக்கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட குடும்ப மாது ஒருவரை காவல் துறை கைது செய்துள்ளது.

இந்த அருவருக்கத்தக்க சம்பவம் இங்குள்ள புன்சாக் ஆலாமிலுள்ள அந்த குடும்ப மாதுவின் வீட்டில் நடந்துள்ளது. அந்த 33 வயதுடைய  தனித்து வாழும் அக்குடும்ப மாதுவைக் காவல் துறை அவரது வீட்டில் கைது செய்தனர்.

அதற்கு முன்னதாக சமூக பொதுநலத் துறை பாதிக்கப்பட்ட 14 வயது சிறுவனிடம் அவனது தாய் வழுக்கட்டாயமாக உடலுறவில் ஈடுபட்ட காணொளி ஒன்றை கைப்பற்றினர்.

அவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறை குறித்து காவல் துறையிடம் புகார் அளித்தனர்.

கிடைக்கப்பட்ட புகாரின் பேரில், கோலசிலாங்கூர் மாவட்ட காவல் தலைமையகத்தின் டி11 குற்றவியல் துறை அதிகாரிகள் விரைந்து  அந்த மாதைக் கைது செய்துள்ளனர் என்று மாவட்ட காவல் தலைமையகத்தின் தலைவர் சூப்பரின்தென்டன்  ரம்லீ  காசா உறுதிபடுத்தினார்.

அம்மாதுவிற்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள் என்றும் இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் அவளது மூன்றாவது மகன் என்று தெரியவந்துள்ளது.

"இந்த அருவருப்பான சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில்  நடந்துள்ளது. மேலும் சம்பவத்தின் போது அக்குடும்பமாது தனது வாயின் வழி மகனின் மர்ம உறுப்பைப் புணர்ந்துள்ளார்.

"பிறகு தன் மகனை தன்னுடன் உடலுறவில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தி அவளது வீட்டில் உள்ள கட்டிலறையில் பாலியல் வல்லுறவு கொண்டதோடு, அந்த அருவருக்கத்தக்க நடவடிக்கையை தனது கைத் தொலைப்பேசியால் பதிவு செய்துள்ளது முதல் கட்ட விசாரணையின் வழி தெரிய வந்துள்ளது," என்று அவர் இன்றிரவு வெளியிட்ட ஓர் அறிக்கையின் வழி மேலும் கூறினார்.

இருப்பினும் காவல் துறையினர்  கைது செய்யப்பட்ட குடும்பமாதுவிடமிருந்து  குற்றத்தில் ஈடுபட்டபோது பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் கைத்தொலைப்பேசியையும் கைப்பற்றினர்.

அம்மாதினால் பாதிப்புற்ற அவளது மகனை காவல் துறை காப்பாற்றி  சமூக நலத் துறையின் பராமரிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக ரமலீ தெரிவித்தார்.

கைதான அக்குடும்ப மாதுவிடம் சிறுநீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர் எந்த ஒரு தடைவிதிக்கப்பட்ட போதைப்பொருளும் கொண்டிருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

அம்மாது தற்போது ஐந்து நாட்களுக்கு மேற்கண்ட விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். காவல் துறை இந்த சம்பவத்தை செக்‌ஷன்  14, செக்‌ஷன் 5  2017 ஆண்டு சிறார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் விசாரித்து வருகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement