ஊடகவியலாளர்களின் படைப்புகள் களவாடப்படும் விவகாரத்தை பல்லூடக அமைச்சு கடுமையாகக் கருதுகிறது!


ஈப்போ, மே 31 - 
ஊடகவியலாளர்களின் படைப்புகள் அனுமதியின்றி களவாடப்படுவதிலிருந்து பாதுகாக்கும் விவகரத்தை  இலக்கியல் பல்லூடக அமைச்சு தீவிரமாக ஆராயும் என்று அமைச்சர் ஃபாமி பாசில் உறுதியளித்தார்.

பத்திரிக்கை நண்பர்களின் சமூக நலன்கள் காக்கப்படுவது மட்டுமின்றி  அவர்களின் படைப்புகள் பாதுகாக்கப்படுவதையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என்றார்.

தற்போதுள்ள அதீத தொழில்நுட்ப  யுகத்தில், பத்திரிக்கை, ஊடகவியல் நிருபர்களின் புகைப்படம், செய்திகள் ஆகியவை அனுமதியின்றி அனாவசியமாக கலவாடப்படுவது பரவலாக நிகழ்கின்றது.

நமது பத்திரிக்கை நண்பர்கள் வியர்வைத்துளியால் தயாராகும் செய்தி தவறாகப் பயன்படுத்தப்படுவது, புகைப்படங்களிலுள்ள பெயர்களும் மூன்றாம் நபரால் அழிக்கப்படுவது தொடர்பாக நிறைய புகார்களைப் என்னுடைய அமைச்சு பெற்றுள்ளது.

இவ்விவகாரத்தில் தீர்வு காணும் பொருட்டு, ஒரு கலந்துரையாடல் அவசியம் நடத்தப்படவேண்டும் என்பது  அவசியமாகிறது என்றார்.

அன்மையில் பேராக்கில் நடைபெற்ற மடானி அரசாங்கத்தின் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துக் கொண்டபோது அவர் செய்தியாளர்களிடம் மேற்கண்டவாறு  கூறினார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement