அனைத்துலக சுகாதார சம்மேளனம் பிரகடனம்!
ஜெனிவா, மே 9 -
கோறணி நச்சு இனி உலக சுகாதாரத்துக்கான அவசர சிகிச்சை பிரிவு அல்ல என்று உலக சுகாதார சம்மேளனம் அன்மையில் பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்த புதிய அறிவிப்பு சுமார் 6.9 மில்லியன் மானுட குலத்தை கொன்று குவித்ததோடு பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்த நச்சுக்கு ஓர் சவக்குழியாக அமைந்தது.
அன்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற 15ஆம் அவசர செயற்குழு சந்திப்புக் கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவு இது என்று உலக சுகாதார சம்மேளனத்தின் தலைவர் தெட்ரோஸ் அடானொம் கேப்ரியேசுஸ் சொன்னார்.
அந்த செயற்குழு உடனடியாக உலக சமுதாயத்தின் தேவையற்ற கவலையைப் போக்கும் நடவடிக்கையாக கோறணி நச்சு இனி அவசர சிகிச்சைக்கான பிரிவு அல்ல என்று சீக்கிரம் அறிவிப்பு செய்யுமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர்.
அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அச்செயற்குழுவின் ஆலோசனைகளை ஏற்று, மிகுந்த நம்பிக்கையுடன் இனி கோறணி நச்சு உலக சுகாதார அவசர சிகிச்சைப் பிரிவு அல்ல என்று பிரகடனம் செய்கிறேன்," என்றார் அவர்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கோறணி நச்சு உச்சக்கட்ட எச்சரிக்கை நிலையில் இருப்பதை முதன்முறையாக உலக சுகாதார சம்மேளனத்தின் அவசர பிரிவு செயற்கழு பிரகடனம் செய்தது.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks