தீக்குளிப்பேன் என்று குரல் நலமற்ற தேவாவை சலோமியா பாடவைத்த ரசிகன் - இன்றும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத தேவா!


கோலாலம்பூர், மே 28 - 
குரல் சரியில்லாத காரணத்தால் பாட முடியாத நிர்பந்தத்திற்கு ஆளான தேனிசைத் தென்றல் தேவாவை உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று மிரட்டி பாடவைத்த ரசிகனின் ஆபத்தான, சுவாரஸ்யமான சம்பவத்தை அவர் ஒலியும் ஒளியும் உடன் பகிர்ந்து கொண்டார்.

அப்போது தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்துப் பாடி புகழ் பெற்ற கான பாடல் சலோமியா பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானக் காலம். உலக ரசிகர்களுக்கு ஏதெனும் சம்பவத்தை நினைவு கூற இயலுமா? ஒரு ரசிகரை என்னால் மறக்க இயலாது. 

ஒரு கோயில் திருவிழா சென்னையில், கோவில் திருவிழாக்களின் போது இரவு 10 மணிக்கு மேல் 10 பேருடன் நிகழ்ச்சி நடத்துவார்கள். இசை உலகத்திற்கு அப்போது நான் புதிது. கவலைபடாதே சகோதரா, சலோமியா பாடல் புகழடைந்த தருணம்.

எனக்கு தெரிந்த மெல்லிசை ஏற்பாட்டாளர் என்னை அழைத்து, அண்ணா இரவு இசை கச்சேரி ஒன்று அம்மன் கோயிலில் ஏற்பாடு செய்துள்ளோம் நீங்கள்தான் அதற்கு தலைமை தாங்க வேண்டும் என்றார். "அவர் வேண்டுகோளுக்கு இணங்க நான் அங்கே சென்றபோது, அண்மையில் ஹிட்டாகி பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் சலோமியா பாடலைப் பாடும் படி கூட்டத்தில் திரண்டவர்கள் கெஞ்சினர்.

ஆனால், அன்றைக்கு என்னால் பாட முடியாத இக்கட்டான சூழலுக்கு ஆளானேன் காரணம் தொண்டை அடைத்துக் கொண்டது. ஏன் என்றும் தெரியவில்லை, என்னால் பாடவும் முடியவில்லை.

"இது அவர்களுக்குத் தெரியாது. அப்போது, திடீரென்று அக்கூட்டத்திலிருந்து ஒரு 30 வயதுதக்க ஆடவர் ஒருவர் பெட்ரோல் கேனுடன் எதிரே வந்து நின்றார். கையில் ஒரு தீப்பெட்டியுடன் என்னை நோக்கி, தலைவா! சலோமியா படவில்லையென்றால் இங்கேயே ஊத்திக் கொண்டு தீயை பற்றவைப்பேன், இங்கேயே ரெடி, திறக்கட்டுமா (பெட்ரோலை)? என்றான் அந்த ஆடவன்.

எனக்கோ பேரதிர்ச்சி, குரல் வளம் சரியில்லாததால் பாட முடியாத சூழ்நிலை, நான் என்ன பன்னுவேன்? அவனை சமதானப்படுத்தவே, சரிப்பா, நான் உனக்காக படுகிறேன் என்று பாடினேன்... கரகரத்த குரலில் பாடிய தொடக்கத்தில் சிரமமாக இருந்தது. ஆனால் பிறகு உரக்க பாடியபோது பழைய குரலுக்குத் திரும்பியது. 

அந்த ஆடவன் தீக்குளிக்காமல் இருக்க நான் முயன்று இறுதியில் சலோமியா என்று உறக்க பாடினேன். அனைவரும் அவ்வாடவனின் செயல் கண்டு கத்தினார்கள். பாடிய பிறகுதான் எனக்கு நிம்மதி வந்தது. அந்த ஆடவனின் காதில் என் பாடல் ஒலித்ததும் அமைதியானான்.

அந்த இளைஞன் போதையில் இருந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் அந்த ஆடவனிடமிருந்து தீப்பெட்டி, பெட்ரோலை பிடுங்கி வீசியெறிந்தனர். இது 1992இல் நடந்தது. இன்றளவும் யாரெனும் வாகனம் எரிவாயு இன்றி சாலையில் நின்றால் பெட்ரோல் வாங்குவதற்கு பெட்ரோல் கேனுடன் செல்லும்போதெல்லாம் எனக்கு இந்த சம்பவம்தான் நினைவிக்கு வரும் என்றார்.

மேலும், ஒரு பக்கம் அந்த அடவனின் வெறித்தனமான செயலைக் கண்டு பதற்றத்தையும் அதே வேளையில் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது என்றார் தேவா.

அந்த அளவுக்கு சலோமியா பாடல் மக்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது அந்த தருணத்தில்தான் உணர்ந்தேன் என்று மிக சுவாரஸ்யத்துடன் அச்சம்பவம் பற்றி நினைவு கூர்ந்தார்.

அதுமட்டுமின்றி, சினிமா உலகில் தமது உதயம் குறித்து பேசிய அவர், நடிகர் ராமராஜனின் மனசுக்கேத்த மகாராசா திரையின் மூலம் சினிமா இசை உலகில் காலடி எடுத்து வைத்ததாகக் கூறினார். அதில் பாடல்கள் அனைத்தும் மிகப் பெரிய வெற்றி.

வைகாசி பொறந்தாச்சு எனும் படமும் எனக்குப் பாதையைத் திறந்து விட்டது.
ஆனால் ரஜினி சரத் பாபு நடிப்பில் உருவாகி மாபெறும் வெற்றி பெற்ற அண்ணாமலைதான் 'இவர்தான் இசையமைப்பாளர் தேவா என்று என்னை உலகத்திற்கு அடையாளம் காட்டியது.

பிறகு, கமல் - அஜித் என்று படியெற்றம் தொடர்ந்தது. விரைவில் அத்திப்பூ எனும் படத்திற்கு இசையமைக்கவிருக்கிறேன். இது என்னை இன்னும் உயர்வுக்குக் கொண்டு செல்லும் என்று  நம்பிக்கை அடைகிறேன் காரணம்  எந்த திரைப்படத்தையும்  என் வாழ்வின் முதல் படமாகத்தான் நினைக்கிறேன்.

நாம் படைக்கும் எந்த ஒரு சாதனையும் நமது ஓய்வு காலத்தைத் தாமதமாக்கும்  என்பது நிச்சயம். யார் சொன்னது எனக்கு வயதாகி விட்டது என்று, வயது என்பது ஓர் கணக்குதான், இப்போ உங்களுக்கு குத்துப் பாட்டு, மெல்லிசை பாட்டு வேண்டும் என்னால் தர முடியும் நான் இன்னும் இளமையுடனும் துடிப்புடனும் இருக்கிறேன் என்பதுதான் உண்மை என்று உத்வேகத்துடன் ஒலியும் ஒளியும் ஊடகத்திடம் பேசினார்.

கருத்துகள்

Paid Advertisement

Paid Advertisement