எந்த பாடகர்களும் அவர் பாடலை இங்கே பாடாதது வேதனையளிக்கிறது!
கோலாலம்பூர், மே 29 -
தேனிசைத் தென்றல் தேவா உண்மையில் மெல்லிசை உலகின் முடிசூடா சக்ரவர்த்தி, இதுதான் உண்மை.
ஆயினும், இதனை உணராமல், பாடகர்கள் இசை நிகழ்ச்சிகளில் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல் பட்டியலை மட்டும் முக்கியத்துவம் வழங்கி பாடுவது மனதிற்கு மிக வேதனை அளிப்பதாக, நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளார் ரிஷி அவர்கள் ஒலியும் ஒளியும் ஊடகத்திடம் பிரத்தியேக நேர்கணலில் மனம் திறந்தார்.
தேவா சார் இந்தியாவில் மட்டுமின்றி உலகலவில் புகழ் பெற்ற இசையமைப்பாளர். எனக்கு அவரை கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் தான் அறிமுகம், நான் அப்பா என்றுதான் அவரை அழைப்பேன்.
கோரணி நச்சுக்கு முன் அவரை சென்னையில் நான் சந்தித்து அவரின் இசை நிகழ்ச்சியை மலேசியாவில் நடத்த பேச்சுவார்த்தையில் அவருடன் ஈடுபட்டோம்.
பெரும்பாலானோருக்கு அவர் இசையில் நிகழ்த்திய மாயஜாலங்களும் புகழ்பெற்ற மெல்லிசை கானங்களும் இன்று வரை அனைவராலும் முனுமுனுக்கப்படுகின்றன.
அவ்வகையில் கோரணி நச்சுக்கு பின் மலேசியாவில் ஒரு இசையமைப்பாளர்கள் பட்டாளமே வருகை தந்து இசை நிகழ்ச்சிகளை கொடுத்தனர்.
ஆகையால், ஏன் நாம் தேனிசைத் தென்றல் தேவாவை வரவழைக்கக் கூடாது எனும் என்னம் மனதை உறுத்தியது. 80, 90 இளைஞர்கள் அப்போதைய காலகட்டத்தில் தேவாவின் காதல் மெல்லிசை, கானா பாடல்களில் மோகம் ஈர்ப்பு கொண்டிருந்தனர் அதனை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
ஆனால், அன்மையில் நிறைய இசையமைப்பாளர்கள் தொடர்ச்சியாக வந்து சென்றனர் ஆனால், மேடைகளில் இருந்த பாடகர்கள் ஒருவர் கூட தேவாவின் பாடல்களைப் பாடவில்லை.
கேட்டதற்கு அவர்கள் இதர இசையமைப்பாளர்களின் பாடல் பட்டியலை மட்டுமே முக்கியத்துவம் வழங்குவதாகவும், தேவாவின் பாடல்கள் இல்லை என்றது, மனதுக்கு மிக வேதனை அளித்தது.
"தேவா தந்த மெல்லிசை காதல் பாடல்கள், கானா பாடல்கள் ஓரிரண்டல்லா. அவை எண்ணில் அடங்காதவை, இவ்வளவு ஏன், இன்றும் அவரின் பாடல்களை நாங்கள் திருவிழா, திருமணம் நிகழ்வுகளில் கேட்டு ரசிப்போம் காரணம் அதற்கு மவுசு தனித்துவம் உண்டு.
"இதனைக் கருத்தில் கொண்டு நாங்கள் தேவா அவர்களை அழைத்து இந்த மாபெரும் இசைத் திருவிழாவை தலைநகரில் எதிர்வரும் ஜூன் 3ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளோம்.
அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு இருக்கைக்கும் தேவாவின் இசையில் புகழ்பெற்ற பாடல்களான, மீனம்மா, சலோமியா, கவலைபடாதே சகோதரா, ஆட்டோக்காரன், காத்தடிக்குது, மக்காரேனா என்று பெயர் சூட்டியுள்ளோம்.
ஆயிரக்கணக்கான பாடல்கள் வந்து போகலாம், ஆனால் பாட்சா போன்ற சூப்பர் ஹிட் தேவா பாடல்கள் இன்னும் மனதில் பசுமையாக இருக்கின்றது.
அண்மையில் இந்த இசை நிகழ்ச்சி ஏற்பாடு காரணமாக சென்னையில் அவரைச் சென்று சந்தித்த வேளையில் அவர் புதிய படத்திற்கு இசை அமைப்பதில் மும்முறமாக இருந்தார்.
அப்பா, இது சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்திற்காகவா இசையமைக்கிறீர்கள் என்று கேட்டபோது, இல்லை. இல்லை இது ஒரு கிராமிய கதை சார்ந்த படம் என்றார்.
இயல்பாகவே, நம் தேனிசைத் தென்றல் தேவா மட்டுமே கிராமிய ஹிட் பாடல்களைக் கொடுக்க முடியும் என்பது உண்மை.
எத்தனையோ பாடல்கள் வந்து போகலாம், ஆனால், கானா புகழ் தேவாவின் இந்நிகழ்வு இம்முறை ஒரு மிகப் பெரிய இசைத் திருவிழா எனலாம். காரணம் அவரது இசையில் தங்களின் வசீகரக் குரலால் மக்களின் உள்ளங்களை வசியப்படுத்திய ஹரிஹரன், அனுராதா ஶ்ரீராம், சபேஷ் முரளி, எஸ்.பி.பி சரன், உன்னிகிரிஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு நம்மை இசை மழையில் நனைக்கப்போவது நிச்சயம்.
தேவா இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கு நட்டம் ஏற்படப்போவதில்லை மாறாக, நீங்கள் முழுமனதிருப்தியுடன் வீடு திரும்புவது நிச்சயம், யாரும் ஏமாறப்போவதில்லை என்பது நான் உறுதியளிக்கிறேன்.
இது எங்களின் சிட்டி தயாரிப்பின் முதல் முயற்சியாகும். தற்போது தேவா உலகலவில் இசைப்பயணத்தைத் தொடங்கியுள்ள வேளையில் அதனை மலேசியாவிலிருந்து தொடங்குகிறார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks