கோலாலம்பூர், மே 29 -
நாட்டின் மேம்பாட்டிற்கும் வளப்பத்திற்கும் அச்சு ஊடகங்கள் இன்றும் முக்கியப் பங்காற்றுகிறது என்பது மறுக்க முடியாத கூற்று என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் நினைவுப்படுத்தினார்.
தற்போதை உலக பொருளாதார சூழலில் குறிப்பாக நாளிதழ் விற்பனையில் சரிவைச் சந்தித்தாலும், இன்றலவும் இயங்கி வரும் அச்சு ஊடகங்கள் நாட்டு மக்களிடத்தில் செய்திகளைக் கொண்டு சேர்க்கும் கடமையிலிருந்து தவரியதில்லை என்று பெருமிதம் கொண்டார்.
என்னதான் பெரும்பாலான மக்கள் சமூக ஊடகத்திற்கு அன்றாட செய்திகளைப் பெறுவதற்கு முக்கியத்துவம் வழங்கினாலும், இன்றும் அச்சு ஊடகங்களிடத்தின் மீதுள்ள பதிப்பும் மாண்பும் குறைந்ததில்லை மாறாக மேலோங்கியிருக்கிறது.
சுதந்திரமான, நடுநிலை, உயர்நெறி ஆகிய கோட்பாட்டினை அச்சு ஊடகங்கள் தொடர்ந்து தங்களது எழுத்துக்களில் நிலைநிறுத்தி வந்தால் நிச்சயம் நாளிதழ்களுக்கு இந்நாட்டில் அழிவில்லை என்பது உறுதி என்று தம்பூன் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்வார் நினைவுப்படுத்தினார்.
மேலும், என்னதான் இலக்கியல் வளர்ச்சியின் காரணமாக சமூக ஊடகங்கள் வளர்ந்து வந்தாலும், நாளிதழ் வாங்கி செய்தியைத் தெரிந்து கொள்ளும் வழக்கத்தை இன்னும் தாம் மறக்கவில்லை என்று பிரதமர் கூறினார்.
"நான் ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களைப் பார்த்து புதிய தகவல்களைத் தெரிந்து கொள்வதுண்டு.
"இருப்பினும், இன்று வரை ஒவ்வொரு காலை வேளையில் செய்தி தாட்களைப் படித்து அதிலுள்ள செய்தியைத் தெரிந்து கொள்ளும் பழக்கத்தை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் என்று நேற்று ஈப்போ மாநகரிலுள்ள மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தேசிய நிருபர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேருரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் மற்றும் தற்போது பணியாற்றிவரும் நிருபர்களின் நலனுக்காக கணிசமான நிதியொன்றை பிரதமர் அறிவித்தார்.
மேலும் தனதுரையில் கூறுகையில், அரசாங்கத்தை ஆதரித்து எதிர்கட்சிகளை பொருட்படுத்தாமல் இருக்கும் கலாச்சாரப் போக்கு இனி வரும் காலங்களில் உள்நாட்டு ஊடகங்கள் கைவிட வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் தலைவரும் நம்பிக்கைக் கூட்டணியின் ஆலோசகருமான் அவர் கூறினார்.
இனி வரும் காலங்களில் அரசாங்கத்தையே ஆதரித்து எழுதும் கலாச்சாரம் தொடரக்கூடாது. எதிர்கட்சியினரின் கருத்துக்கும் குரலுக்கும் செவி சாய்த்து செய்தி வெளியிட வேண்டும் என்று அன்வார் கேட்டுக் கொண்டார்.
இந்நாட்டின் அரசியல் சூழல் தற்போது மாற்றம் கண்டிருப்பது மட்டுமல்லாமல் முழு பத்திரிக்கை சுதந்திரம் முக்கியம் என்பதில் அரசாங்கம் தனது உறுதிபாட்டை வெளிபடுத்தியுள்ளது.
"ஆகையால், இனிவரும் காலங்களில் ஆளும் கட்சி எதிர்கட்சி எனும் பாகுபாடு இல்லாமல் இரு தரப்பின் செய்திகளையும் கருத்துக்களையும் நடுநிலையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks