கோலாலம்பூர், மே 25 -
செவித்திறன் குறைபாடுள்ள ஹவாரி ஹாஷிம் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலையில் இருந்து கீழே இறங்கியபோது காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது.
மலேசியாவின் 2023 எவரெஸ்ட் மலை குழு உறுப்பினரான 33 வயது ஹவாரி ஹாஷிம், அருகில் உள்ள லோட்சே மலையின் அடிவாரத்தில் விழுந்திருக்கலாம் என எவரெஸ்ட் மலையை முதலில் கால் பதித்த வீரர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் எவரெஸ்ட் மலையை அடைந்த பின்னர் கடந்த வெள்ளிக்கிழமையன்று காணாமல் போனதாக அறிக்கை ஒன்றில் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், லோட்சே மலை சரிவுகள் செங்குத்தான நிலையில் இருப்பதால் மலை ஏறுபவர்கள் வழுக்கி விழுந்து மலை அடிவாரத்தில் உள்ள பனிப்பாறைகள் மீது விழ வாய்ப்புள்ளது என்று மகேந்திரன் கூறியுள்ளார்.
"லோட்சே மலையின் அடிவாரத்தில் உள்ள பகுதி மிகவும் அகலமானது மற்றும் தேடுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும். மேலும், பாதிக்கப்பட்டவர் பனிப் பிளவில் விழுந்திருந்தால், தேடுதல் முயற்சிகள் கடினமாக இருக்கும்", என்று அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
1997 ஆம் ஆண்டில், 1,000 மீட்டர் கீழ் அடிவாரத்தில் லோட்சே மலை சரிவுகளில் தவறி விழுந்த மலை ஏறும் குழுவினரில் ஒருவரை வெற்றிகரமாக மீட்கப்பட்டதை அவர் நினைவுப்படுத்தினார்.
இதற்கிடையில், ஹவாரி போதுமான பிராணவாயுவை கொண்டு வராமல் இருந்திருக்கலாம் என்பதைக் குறித்து மகேந்திரன் கவலை தெரிவித்ததுடன் அவரை தேடும் பணிகள் நடைப்பெற்று கொண்டிருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

கருத்துகள்
கருத்துரையிடுக
Thanks